Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இலக்கியவாதிகளை திமுக அரசு அவமதிக்கிறதா?..
    தமிழ்நாடு

    இலக்கியவாதிகளை திமுக அரசு அவமதிக்கிறதா?..

    Editor TN TalksBy Editor TN TalksJune 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20200228142303 GettyImages 1087147182
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் வர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்திய அகாடமி விருதுகள் பெற்று, தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு கனவு இல்லம் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ், கல்மரம் என்ற நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 1409 சதுர அடி வீடு கடந்த 2022 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது.

    இந்நிலையில் ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக கூறி, கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து 2024 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து திலகவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், ஏற்கனவே சொந்தமாக வீடு இருந்தாலும், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எழுத்தாளர்கள் வீடு ஒதுக்கீடு பெற தகுதி உண்டு என 2022 ஆம் ஆண்டு அரசாணையில் குறிப்பிட்டுள்ள நிலையில், அதனை மாற்றி வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற தகுதி இல்லை என அரசாணையில் திருத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, கவிஞர் மு.மேத்தா உள்ளிட்டோருக்கும் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது என திலகவதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள் ராஜ் தெரிவித்தார்.

    இதையடுத்து வீடு ஒதுக்கீடு செய்யும் படி யார் கேட்டது? அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு அதை ரத்து செய்தது சாகித்ய அகாடமி போன்ற உயரிய விருதுகளை பெற்ற இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல், இது துரதிருஷ்டவசமானது. இலக்கியவதை இவ்வாறு நடத்தக் கூடாது என கண்டனம் தெரிவித்தார்.

    மேலும் தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அர்பணித்தவர்களுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது வாழ்நாள், இறுதி வரை, கவுரவப்படுத்தினார். தற்போது அரசு பிறப்பித்துள்ள திருத்த அரசாணை கருணாநிதியின் விருப்பத்திற்கு முரணானது. இந்த அரசு கருணாநிதியின் விருப்பிற்கு மாறாக செயல்படாது என நம்புகிறேன்.

    திருத்தம் செய்வதாக இருந்தால் கூட அதை முன் தேதியிட்டு அமல்படுத்த கூடாது என தெரிவித்து கவிஞர் மு.மேத்தாவிற்கு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்ய உள்ள வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீதிமன்றத்தில் ஆஜரான நயினார் நாகேந்திரன்…
    Next Article எந்த ஓடிடியில் என்ன படம்?
    Editor TN Talks

    Related Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.