இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இருந்தபோதிலும் இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பர்மிங்காமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தோல்விக்கு பிறகு பேட்டியளித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ”கடினமான ஒன்று. தோல்வியை 2 தருணங்கள் கொடுத்தன. 200/5 என தடுமாறிய இந்தியாவை சுருட்ட முடியாமல் போனதும், 80/5 என நாங்கள் தடுமாறியதும் முக்கிய காரணங்களாக அமைந்தன.
அங்கிருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது. 200/5 என இந்தியா தடுமாறிய போது நீங்கள் வலுவான நிலையில் இருந்தீர்கள். ஆனால் போட்டி ஆழமாக செல்லும் போது பிட்ச் நாங்கள் எதிர்பார்த்தது போல் விளையாடவில்லை. சொல்லப்போனால் அது இந்தியாவுக்கு அதிக பொருத்தமாக அமைந்தது. திட்டங்களை மாற்றி நாங்கள் அனைத்தையும் முயற்சித்தோம்.
முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 465/4
ஆனால் அதற்குள் எதிரணி மேலே சென்று விட்டால் போட்டியை மல்யுத்தம் செய்தும் மீண்டும் கொண்டு வருவது கடினமாக இருந்தது. சுப்மன் பேட்டிங்கில் நம்ப முடியாத வகையில் விளையாடினார். நாளின் இறுதியில் நீங்கள் பேட்டிங் செய்வது கடினமானதாக இருக்கும். ஜேமி ஸ்மித் அணிக்குள் வந்தது முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் விரும்பும் கீப்பருக்கு தகுந்தார் போல் அவர் அபாரமாக செயல்பட்டு வருகிறார்” எனக் கூறினார்.
