வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர், கடைசியாக நடித்த கட்டா குஸ்தி, லால் சலாம் திரைப்படங்களில் இவரது நடிப்பு வரவேற்பை பெற்றிருந்தது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால் – ஜூவாலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான் பெயர் சூட்டியுள்ளார். விஷ்ணு விஷாலும், முன்னாள் பேட்மிட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், இக்குழந்தையின் பெயர் சூட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான் குழந்தைக்கு ’மிரா’ எனப் பெயர் சூட்டியுள்ளார். மிரா என்பதற்கு அளவுகடந்த அன்பு மற்றும் அமைதி என்று பொருள் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
