மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கலையரசன். அதனை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேப் போல கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து தற்போது கலையரசன் கதாநாயகனாக ’டிரெண்டிங்’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவராஜ் இயக்கியுள்ளார். கலையரசனுக்கு ஜோடியாக பிரியாலயா என்பவர் நடித்துள்ளார். இவர்களுடன் பிரேம் குமார் மற்றும் பெசண்ட் நகர் ரவி ஆகியோரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கமர்ஷியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ளது. அதனையொட்டி படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் ஆர்யா ஆகியோர் இப்படத்தின் டிரெய்லர் ஆகியவற்றை வெளியிட்டுள்ளனர்.