ஹோட்டலுக்கு நேரடியாக சென்று உணவு வாக்குவதை தாண்டி தற்போது செல்போனில் ஆர்டர் செய்தால் வீடுதேடி உணவு வரும் அளவு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில் பலருக்கு அதற்கு தேவையான உணவை தயார் செய்வதிலும், சரியாக கொடுப்பதில் பல குழப்பங்கள் நிலவும். அதிலும் வேலைக்கு செல்பவர்களால் சரியான நேரத்திற்கு சரியான உணவை கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். அவ்வாறு சிரமபடுபவர்களுக்காக கேரளாவில் புது ஸ்டார்ட் அப் உருவாக்கப்பட்டுள்ளது.
கோட்டயத்தில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களுக்கு ஆர்டரின் பெயரில் வீட்டில் தயாரித்த சுவையான உணவை டோர் டெலிவரி செய்து வருகிறது. இந்த முயற்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ”கேஸ் டாக் புட்” என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நண்பர்களான சாரங் ஸ்ரீதர் மற்றும் கோவிந்த் ஆகியோரால் நிறுவப்பட்டுள்ளது. ஆர்டர்கள் வாட்ஸ் அப் வழியாக பெறப்பட்டு டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்டமாக செயலி அறிமுகப்படுத்தி கொச்சி மற்றும் பெங்களூருக்கு சேவையை விரிவுபடுத்த இருப்பதாக கூறப்படுகிறது.