திருமயம் அருகே அரசு பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுக்கோட்டை அடுத்த திருமயம் அருகே உள்ள தேக்காட்டூர் ஊராட்சிக்குட்பட நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 30 மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கலா என்பவர் கடந்த 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உதவி ஆசிரியராக தினேஷ் ராஜா 11 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த பத்தாம் தேதி தலைமை ஆசிரியர் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை கலாவிடம் கேட்ட போது கடந்த 3 வருடங்களாக பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய தனியாக ஆள் நமணசமுத்திரம் குடியிருப்பத்தைச் சேர்ந்த ராணி என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருந்ததாகவும் இந்நிலையில் நமணச்சமுத்திரம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வீரம்மாள் மற்றும் குறிச்சிபட்டியை சுதா ஆகிய இருவரும் காலை உணவு திட்டம் சமையல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வீரம்மாள் சுதாவை காலை உணவு சமையல் செய்ய வர வேண்டாம் என கூறியதாகவும் இதனை தலைமை ஆசிரியர் என்னிடம் கேட்காமல் அவரை வேலைக்கு வர வேண்டாம் என ஏன் கூறினீர்கள் என்று கேட்ட காரணத்திற்காக கழிவறை சுத்தம் செய்ய வரும் ராணி என்ற பெண் பள்ளிக்கு வருவதற்கு முன்பாகவே வீரம்மாள் வேண்டுமென்றே தனது மகன் மற்றும் மற்றொரு மாணவரையும் சேர்த்து கழிவறையை சுத்தம் செய்ய வைத்து அதை வீடியோவாக படம் பிடித்து அனுப்பி சமூக வலைதளங்களில் பரவ செய்துள்ளார் என்று கூறினார்.