Close Menu
    What's Hot

    பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.

    உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு ராஜ்ய சபா எண்ணிக்கை 46-ஆக குறையும்!. ப.சிதம்பரம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மணல் கொள்ளையை தடுக்க முயன்றவர் வெட்டிக்கொலை.. செந்தில்பாலாஜி ஆதரவாளர் மீது அண்ணாமலை புகார்..
    தமிழ்நாடு

    மணல் கொள்ளையை தடுக்க முயன்றவர் வெட்டிக்கொலை.. செந்தில்பாலாஜி ஆதரவாளர் மீது அண்ணாமலை புகார்..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 14, 2025Updated:July 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dinamani 2025 07 12 62a82cla Gs7IOL8b0AAeXss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க முயன்றவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

    கரூரில், மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த மணிவாசகம் என்பவர், வாங்கல் வெங்கடேஷ் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்கள் உட்பட, நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    திமுக ஆட்சிக்கு வந்ததும், அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆற்றில் மணல் அள்ளலாம், அதனைத் தடுப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று, தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது, அனைவருக்கும் நினைவிருக்கும். இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாங்கல் வெங்கடேஷ் என்ற நபர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று தெரியவருகிறது.

    கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்திலேயே வைத்து வெட்டிக் கொலை செய்ததும் இதே திமுக ஆட்சியில்தான். தற்போது, இன்னொரு கொலை. மணல் கொள்ளையைத் தடுத்தால் கொலை செய்வோம் என்று பொதுமக்களுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல் இது.

    சட்டத்தைக் குறித்துச் சிறிதும் பயமின்றி, கொலை செய்யும் அளவுக்கு மணல் கொள்ளையர்களின் அராஜகம் அத்துமீறியிருக்கிறது என்றால், அவர்கள் பின்னணியில் கரூர் கேங் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    மணிவாசகம் இறப்பிற்கு நீதி வேண்டும். இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள், மணல் கொள்ளையின் பின்னணியில் இருப்பவர்கள் என அனைவரும், சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையேல், கரூர் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினை திமுக அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துக் கொள்கிறேன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த அவலம்..
    Next Article குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு?.. இன்னொரு வேங்கைவயலா?
    Editor TN Talks

    Related Posts

    உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

    April 15, 2026

    தமிழ்நாடு ராஜ்ய சபா எண்ணிக்கை 46-ஆக குறையும்!. ப.சிதம்பரம் எச்சரிக்கை!

    April 15, 2026

    தேர்தல் களம்!. இன்று நாகர்கோவிலில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ!

    April 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.

    உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு ராஜ்ய சபா எண்ணிக்கை 46-ஆக குறையும்!. ப.சிதம்பரம் எச்சரிக்கை!

    வெயிலுக்கு இதமான பழைய சாதம்!. வியக்கத்தக்க மருத்துவ பலன்கள்!.

    இந்திய சினிமாவின் அசுர வேட்டை!. ரூ.3000 கோடி வசூலை எட்டிய முதல் படமாக ‘துரந்தர்’ சரித்திரம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.