Close Menu
    What's Hot

    சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தமா?. வெளியாகும் பகீர் தகவல்!

    அமோனியா வாயு கசிவு விவகாரம்!. ஆலை உரிமையாளர் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை: ரூ.1.5லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை பெண் உதவி கமிஷனர் கைது…
    தமிழ்நாடு

    கோவை: ரூ.1.5லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை பெண் உதவி கமிஷனர் கைது…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2025Updated:July 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் ரூ.1.5லட்சம் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திராவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.

    கோவையில் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனராக இந்திரா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ”சூலூர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கோயிலில் அதிக வருவாய் வருவதாகவும், ஆனால் அந்தக் கோயிலில் முறையான நிர்வாகம் இல்லாததால், அக்கோயிலை இந்து சமய அறநிலைய துறை எடுத்துக் கொள்ள வேண்டும்” எனவும் கூறியிருக்கிறார்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்திலும் சுரேஷ் குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 16-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ”கோயிலை அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளும் நடைமுறையை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தது.

    அதன் அடிப்படையில், சுரேஷ் குமார், அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திராவை சந்தித்த போது, ‘கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக்கொள்வதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றால், தனக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் தர வேண்டும்’ என்று கேட்டதாக கூறப்படுகிறது.

    பிறகு இருவருக்கும் இடையே பேரம் பேசப்பட்டுள்ளது. இரண்டு லட்ச ரூபாயாவது தரவேண்டும் என இந்திரா கூற, இறுதியில் ரூ.1.5லட்சம் கொடுத்தால் மட்டுமே பரிந்துரை செய்யப்படும் என கூறியிருக்கிறார் இந்திரா. இது குறித்து சுரேஷ் குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.

    லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தல் படி, ரசாயனம் தடவிய ரூ.1.5லட்சத்தை இந்திராவிடம் சுரேஷ் வழங்க, அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்திராவை கையும், களவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபா… ரூ.40கோடி சொத்துக்கள் பறிமுதல்…
    Next Article ”தமிழ்நாடு நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    Editor TN Talks

    Related Posts

    சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தமா?. வெளியாகும் பகீர் தகவல்!

    July 9, 2026

    அமோனியா வாயு கசிவு விவகாரம்!. ஆலை உரிமையாளர் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    July 9, 2026

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தமா?. வெளியாகும் பகீர் தகவல்!

    அமோனியா வாயு கசிவு விவகாரம்!. ஆலை உரிமையாளர் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!

    வனப்பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்க புதிய விதிமுறை!. மத்திய அரசு சுற்றறிக்கை!

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.