Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு… இன்று தொடக்கம்…
    தமிழ்நாடு

    கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு… இன்று தொடக்கம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2025-2026-ம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஎச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன.

    இதுதவிர தமிழ்நாட்டில் 597 இடங்கள் உள்ளன. பிவிஎஸ்சி – ஏஎச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2025-26ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் https://adm.tanuvas.ac.in ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 26ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை நடந்தது. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியானது. இதில் பி.வி.எஸ்சி. – ஏ.எச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 6 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200க்கு 200 பெற்று முன்னிலை பெற்றுள்ளனர். இந்நிலையில் 2025 -26 ம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

    பொதுப்பிரிவினருக்கான கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு இணையதளம் மூலம் இன்று தொடங்குகிறது. முதல் சுற்று கலந்தாய்வு இன்று www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் நடைபெற இருக்கிறது. நாளை சிறப்பு பிரிவு [மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, விளையாட்டு வீரர்] கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை மறுநாள் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பதிவு மற்றும் கல்லூரி வளாக விருப்பத்தை இன்று முதல் 24ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டுக்கான ஆணைகள் ஜூலை 26ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாகன நிறுத்துமிடங்களில் இனி கட்டணம் இல்லை… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…
    Next Article பிரிட்டன் முதல் மாலத்தீவு வரை… மீண்டும் சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி…
    Editor TN Talks

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    August 1, 2026

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.