Close Menu
    What's Hot

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு விடுமா?
    தமிழ்நாடு

    திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு விடுமா?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் இருசக்கர ஊர்தியில் சென்று கொண்டிருந்த நித்தின் சாய் என்ற கல்லூரி மாணவர் கொடூரமான முறையில் மகிழுந்து ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்; அவருடன் பயணித்த இன்னொரு மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த படுகொலையை நிகழ்த்திய சந்துரு என்ற மாணவர் திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமான சென்னை மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினரின் பெயரன் என்று தெரியவந்திருக்கிறது. மனிதத் தன்மையின்றி நடத்தப்பட்டிருக்கும் இந்தப் படுகொலை கண்டிக்கத்தக்கது.

    இதுதொடர்பாக பாமக செயல் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

    கொலை செய்யப்பட்ட நித்தின்சாய் என்ற மாணவருக்கும், இந்தக் கொலையை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்துரு என்ற மாணவருக்கும் முன்பகை எதுவும் இல்லை. ஆனால், இரு தரப்பு மாணவர்களுக்கு இடையிலான மோதலில் இருவரும் வெவ்வேறு தரப்பினரை ஆதரித்துள்ளனர். அப்போது ஒரு தரப்புக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசிய சந்துரு, இன்னொரு தரப்பைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவர் மீது மகிழுந்தை ஏற்றி படுகொலை செய்ய முயன்றுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசனின் நண்பர்களான நித்தின்சாய், அபிஷேக் ஆகியோர் சந்துருவின் மகிழுந்தை தாக்கியுள்ளனர்.

    அதனால் ஆத்திரமடைந்து தான் நித்தின் சாயும், அபிஷேக்கும் இரு சக்கர ஊர்தியில் சென்ற போது, அவர்கள் மீது சந்துரு மகிழுந்தை மோதியுள்ளார். அதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், மகிழுந்தை பின்புறமாக கொண்டு வந்து நித்தின் சாய் மீது மீண்டும் ஏற்றி படுகொலை செய்த காட்சிகள் கண்காணிப்புக் காமிராக்களில் பதிவாகியுள்ளன.

    இந்த மோதல் கல்லூரி மாணவர்களுக்கு இடையே இயல்பாக நடந்த மோதலாகத் தோன்றவில்லை. தமது மகிழுந்து தாக்கப்பட்டதை கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட திமுக பிரமுகரின் பெயரன் சந்துரு, மகிழுந்தைத் தாக்கிவர்களில் ஒருவரையாவது கொலை செய்தால் தான் நாம் யார்? என்பது அவர்களுக்குத் தெரியும் என்று கூறி இந்த படுகொலையை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிகாரத் திமிர் தான் திமுக ஆட்சியின் கேடு என்று குற்றஞ்சாட்டுகிறேன்.

    திமுக ஆட்சியில் திமுகவைச் சேர்ந்த அதிகாரம் படைத்த மனிதர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்ன குற்றத்தை வேண்டுமானாலும் செய்யலாம்; அவர்களை காவல்துறை கண்டுகொள்ளாது; அவ்வாறு நடவடிக்கை எடுத்தாலும் அரசியல் செல்வாக்கைக் கொண்டு எளிதாக தப்பி விடலாம் என்ற சூழல் ஏற்பட்டிருப்பது தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம் ஆகும். ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் வாயிலாக திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை.

    நான் மீண்டும், மீண்டும் குற்றஞ்சாட்டி வருவதைப் போல ஆளும்கட்சியினரை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாதது தான் கொலை உள்ளிட்ட குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் ஆகும். இனியாவது காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளித்து செயல்பட வைக்க வேண்டும். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு உள்ளிட்ட மூவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleSTR 49 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? படக்குழு வெளியிட்ட புது அப்டேட்…
    Next Article மிளகாய்பொடி என்ற அடைமொழி வேண்டாம் என கதறும் ரவுடி…
    Editor TN Talks

    Related Posts

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 11, 2026

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    Trending Posts

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 11, 2026

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    April 11, 2026

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    April 11, 2026

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.