Close Menu
    What's Hot

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கழிப்பறையில் கூட திமுக ஊழல் – நயினார் நாகேந்திரன் கண்டம்
    அரசியல்

    கழிப்பறையில் கூட திமுக ஊழல் – நயினார் நாகேந்திரன் கண்டம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு மாடல் அரசின் அராஜகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு..

    சென்னை மாநகராட்சியின் 1,260 இடங்களில் உள்ள 10,000 பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 620 கோடியும், ராயபுரம் மற்றும் திரு.வி.க ஆகிய இரண்டு மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளைத் தனியார்மயமாக்குதற்கு ரூ. 430 கோடியும் என திமுக ஆட்சியில் இதுவரை சுமார் ரூ.1000 கோடி செலவிடப்பட்டும் பொதுக் கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

    குறிப்பாக, ஜனவரி 2022-இல் ரூ. 3.18 ஆக இருந்த ஒரு பொது கழிப்பறையின் பராமரிப்பு செலவானது செப்டம்பர் 2022-இல் ரூ.363.9 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள ரூ. 360.72 எங்கே செல்கிறது? தற்போதுள்ள முக்கால்வாசி பொதுக் கழிப்பறைகள் தண்ணீர், கதவு, தாழ்ப்பாள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தரையெல்லாம் கறைபடிந்து துர்நாற்றம் வீசுகின்றன என்பது திமுக அரசின் ஊழல் முகத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

    ஏற்கனவே, கடந்த 2023-இல் மகளிர் நலனுக்காக ரூ. 4.5 கோடி நிதி செலவில் அறிமுகப்படுத்தப்பட்ட “she toilets” என்ற நடமாடும் மகளிர் கழிப்பறைகள் ஒரு வருடத்திற்குள் காணாமல் போய் விட்ட நிலையில், மீதமிருக்கும் கழிப்பறைகளும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கிடப்பது மிகப்பெரும் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்பது ஆளும் அரசுக்கு தெரியாதா? இப்படி அலங்கோலமாகக் காட்சியளிக்கும் கழிப்பறைகளைப் பராமரிக்க ஆயிரம் கோடி செலவானது என அரசு கணக்கு காட்டுவது யார் காதில் பூ சுற்றுவதற்காக? இவர்கள் கொள்ளையடிக்கும் மக்கள் பணம் யாருக்கு செல்கிறது, எங்கே செல்கிறது?

    ஊழல் முறைகேடுகளுக்குப் பெயர் போன திமுக, தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் கழிப்பறையிலும் கொள்ளையடித்து கஜானாவை நிரப்பிக் கொள்ள துணிந்துள்ளது அருவருக்கத்தக்கது. இந்த ஆட்சியை அரியணையில் இருந்து அகற்றினால் மட்டுமே தமிழகம் புத்துணர்வு பெறும்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜயுடன் கூட்டணி – நாளை பதிலளிக்கும் ஓபிஎஸ்.
    Next Article உதயநிதி தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை
    Editor TN Talks

    Related Posts

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    December 29, 2025

    பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணிதான்! காந்திமதியை விமர்சித்து போட்டி அறிக்கை

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    பகை முடிவுக்கு வந்தது! சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    Trending Posts

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025

    மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

    December 29, 2025

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    December 29, 2025

    உன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

    December 29, 2025

    ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.