தமிழக அரசின் “சமூக நீதி விடுதி ” என்ற பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் மாணவர் விடுதியில் பெயர்பலகையை கம்பி மீது ஏறி நின்று துடைப்பத்தால் வர்ணம் பூசி பிரமலைகள்ளர் சமூகத்தை சேர்ந்த கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி விடுதிக்கு முன்பாக நின்று சமூக நீதி என்ற பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதோடு, தமிழக அரசு சமூக நீதி பெயர் மாற்ற அரசாணையை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர்.
தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் கள்ளர் மாணவ மாணவி விடுதிகளில் பெயரை சமூக நீதி என்ற பெயர் மாற்றத்திற்கு உத்தரவிட்ட தமிழக அரசைக் கண்டித்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் செயல்படும் கள்ளர் சீரமைப்பு மாணவர் விடுதிக்கு சென்ற DNT மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த கள்ளர் சமூகத்தினர்.
அரசு கள்ளர் மாணவர் விடுதியில் சமூக நீதி என்று பெயர் மாற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை கீழே இருந்த கைப்பிடி கம்பி மீது ஏறி துடைப்பதால் வர்ணம் பூசி அளித்து ஆரவாரம் செய்வதோடு மாணவர் விடுதிக்கு முன்பாக நின்று சமூக நீதி விடுதி பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் தமிழக அரசு சமூக நீதிபெயர் மாற்ற அரசாணையை திரும்ப பெற வேண்டுமென்றும் கோஷமிட்டனர்.
அரசு மாணவர் விடுதியில் பெயர் பலகையை துடைப்பதால் வர்ணம் பூசி அளித்து வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.