Close Menu
    What's Hot

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»இனி அரசு திட்டங்களில் கருணாநிதி படத்தை பயன்படுத்த தடை
    அரசியல்

    இனி அரசு திட்டங்களில் கருணாநிதி படத்தை பயன்படுத்த தடை

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    karunanidhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும், முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டது.

    இந்த வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதல்வர் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது எனத் தெரிவித்துள்ளது.

    அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அதேபோல, ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது என தெரிவித்துள்ளது.

    தமிழக அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்த கூடாது எனவும், அரசு நலத்திட்டம் தொடங்குவது, செயல்படுத்துவதற்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது.

    அதேசமயம், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அளித்த புகாரை தேர்தல் தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என தெளிவுபடுத்தி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம் – நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
    Next Article சமூகநீதி விடுதி பெயர் மாற்றத்திற்கு கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    June 17, 2026

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    June 17, 2026

    முதலமைச்சரை சந்தித்தார் வைகோ – திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக ஆயத்தம்?

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    ராணுவ ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வந்த ’நீட்’ வினாத்தாள்கள்… வங்கியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு! 

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.