நாகர்கோவில் பகுதியை சேர்ந்த எம்.ஆனந்த கிருஷ்ணன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2015-2016 ஆம் ஆண்டில் பேராசிரியர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளது. 6 க்கும் மேற்பட்ட பார்க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல்வேறு விதிமுறைகளின் கீழ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .
பேராசிரியர் நியமனத்திற்கு உண்டான உண்டான யுஜிசி நெறிமுறைகளை பின்பற்றாமல் , உரிய அனுபவம் உள்ளிட்டவற்றை பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பல முறை மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2015-2016 ஆம் ஆண்டில் பேராசிரியர் நியமனத்தில் நடந்து முறைகேடு குறித்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு வில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஸ் சந்திரா , பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பட்டது. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம், அந்த மனுவை நிராகரித்து விட்டது என தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பல்கலை கழகம் சார்பில் நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து , புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு , மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
