Close Menu
    What's Hot

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»பூம்புகாரில் பாமக சார்பில் மகளிர் மாநாடு… நிர்வாகிகளுக்கு ராமதாஸ் அழைப்பு…
    அரசியல்

    பூம்புகாரில் பாமக சார்பில் மகளிர் மாநாடு… நிர்வாகிகளுக்கு ராமதாஸ் அழைப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பூம்புகாரில் நடைபெறவுள்ள பாமகவின் மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், பூம்புகாரில் ஆகஸ்ட் 10 – 2025 அன்று நடைபெறவுள்ள, வன்னியர் சங்கம் ஒருங்கிணைக்கும் மகளிர் மாநாட்டுக்கு, குடும்பம்- குடும்பமாய், அணி, அணியாய் திரண்டு வந்து மாநாட்டை வெற்றிபெற வைக்குமாறு உங்களிடம் வேண்டுகிறேன்.

    பெண்களுக்கு பெருமை சேர்க்கவும், பெண்மையை போற்றவும், பெண் கல்வியை வலியுறுத்தவும், பெண்கள் இல்லாமல் குடும்பமோ – நாடோ இல்லை என்பதை உலகிற்கு உரத்து சொல்லவும்; இந்த மகளிர் மாநாடு; அடையாள திருவிழாவாக போற்றப்பட வேண்டும்.

    கண்ணகிக்கு பெருமை சேர்க்கிற பூம்புகார் மண்ணில், காவிரித்தாய் வங்கக்கடலில் கலக்கிற மண்ணில்; வன்னியர் சங்கம் சார்பில், என்னுடைய தலைமையில் நடைபெறுகிற இந்த பிரமாண்ட திருவிழாவில்; பெண் தெய்வங்களே, பெண் தேவதைகளே, சகோதரிகளே – உங்களை பாசத்தோடு எதிர்பார்த்து, வழிமேல் விழிவைத்து நான் அங்கே காத்து கொண்டிருப்பேன்.

    உங்கள் வீரமும், எழுச்சியும் நிரம்பிய பாசத்திருமுகங்களை எதிர்பார்த்து; நான் காத்து கொண்டிருக்கிறேன். உங்கள் வருகையால் நான் மகிழவும், என்னை பார்த்து நீங்கள் மகிழவும், இந்தநாள் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும்.

    பெண்களுக்கு எல்லா நிலையிலும் பாதுகாப்பு, சம உரிமை, கல்வியிலும், வேலையிலும் முன்னுரிமை, குழந்தைகள் நலன், மது- போதை பொருள்கள் ஒழிப்பில் தீவிரம், முழுமையான சமூகநீதி போன்ற எண்ணற்ற நலன்களை போற்றும் பிரகடனங்களை மாநாட்டில் முன் மொழிவதோடு; அவற்றை சிந்தாமல், சிதறாமல் அறுவடை செய்வது எப்படி என்கிற திட்ட வடிவத்தையும்; மாநாட்டில் பேசுவோம், செயலாற்றுவோம்.

    முக்கியமாய் பெண்கள் உணரவேண்டிய ஒன்றாக, வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு இருக்கிறது. அதை முழுமையாய் வென்றெடுக்க, மகளிர் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமே இல்லை. அது எப்படி என்பதையும் என் சகோதரிகளுக்கு மாநாட்டில் விளக்க போகிறேன். அதேபோல் அனைத்து சமூகத்தவருக்குமான உரிய இட ஒதுக்கீடு, சாதி வாரியான கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் மாநாட்டில் பேசுவோம்.

    கண்ணகி – கோவலன் வாழ்வியலை கண்முன்னே நிறுத்தக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க நாடகம், அன்றைய நாளில் பூம்புகார் மண்ணில் நடக்கவுள்ளது என்பதையும்; மகளிர் பெருமளவு பங்கேற்கும் வீரதீர சாகச கலை நிகழ்ச்சிகளும் அன்றே நடைபெறவுள்ளது என்பதையும்; தெரிவித்து கொள்கிறேன்.

    பா.ம.க.வினரும், வன்னியர் சங்க நிர்வாகிகளும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வார்டு நிர்வாகிகளும், உறுப்பினர்களும்; மாநாட்டு மேடையை நோக்கி வருவீர்கள் என்று உறுதிபட நம்புகிறேன்.

    தமிழ்நாடே திரும்பி பார்த்திடவும், “ஆகா, இதுவன்றோ, மகளிர் மாநாடு” என்று வியந்து நிற்கவும்; இந்த மாநாட்டை ஒரு அடையாள மாநாடாகவே நடத்திக்காட்ட போகிறோம்; அதை செய்து முடிக்க போவது டாக்டர் ராமதாஸ் ஆகிய நான் அல்ல; நீங்கள் தான்; மகளிர்தான்; மகளிரை முழுமையாக கொண்டாடி, மகளிரை போற்றி, மகளிர்க்கான எல்லா வகையிலான நீதியும் தடையின்றி கிடைப்பதற்கு உறுதியேற்கும் ஒரே விழா; இந்த விழாதான்.

    விரைந்தும், மகிழ்ச்சியுடனும், பூம்புகார் வருவீர்; அங்கே நாம் சந்திப்போம்; நம்முடைய வெற்றிகளுக்கான புதிய பாதை குறித்து கூடி சிந்திப்போம்; பேசி முடிவெடுப்போம்” என தெரிவித்து உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. நிரம்பிய ஆறுகள், அணைகள்…
    Next Article திருப்பூர் : சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை… அசாம்பாவிதத்தை தடுக்க வந்த இடத்தில் விபரீதம்…
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவின் ஜெராக்ஸ்; காய்ந்துபோன சக்தி; மிஸ்டர் சீப் மினிஸ்டர் – கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

    June 13, 2026

    மத்திய அரசின் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் மாநாடு – ஜூன் 17-இல் ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

    June 13, 2026

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    நடிகர் ஜீவாவின் புதிய பட அப்டேட்!

    ‘எல்லாம் இனிதே’!- ‘சேயோன்’ புதிய புகைப்படம் வெளியீடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.