மதுரையில் நடைபெற்று வரும் நடிகர் விஜய்யின் த.வெ.க மாநாட்டுக்காக பேனர் வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கியதில், கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் நாளை நடைபெறுகிறது. இதற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மீதமுள்ள பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தவெக மாநாட்டிற்கான பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனை காளீஸ்வரன் என்ற இளைஞர் செய்து வந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அவர், பேனர் அமைக்கும் போது, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.