சமூக நீதி குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது திமுகவினர் துரோகிகள் சமுக நீதிக்கான விரோதிகள்
தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதியும் திமுக நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மை – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மழை வர உள்ளதால் சென்னை மக்கள் படகுகளுடன் தயாராக இருக்க வேண்டும் பொருட்களை எல்லாம் பத்திரமாக மொட்டை மாடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்
2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த தேர்தல் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பான ஆவண தொகுப்பு விடியல் எங்கே என்ற தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய அன்புமணி,
பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக 36 வாக்குறுதிகள் கொடுத்தார்கள் ஆனால் அதில் 14 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. பல வாக்குறுதிகள் அரைக்குறையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் 4 வயது குழந்தை முதல் பாட்டிக்கு பாதுகாப்பு இல்லை. சமுக நீதிக்கு திமுகவுக்கு எள்ளவும் சம்பந்தம் கிடையாது என பேசினார்.
சமுக நீதிக்காக 21 வாக்குறுதிகள் அளித்தனர். அதில் 3 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என தெரிவித்த அன்புமணி, பழைய ஓய்வூதியம் அமுல்படுத்துவதில் திமுகவுக்கு என்ன பிரச்சினை. அதை நிறைவேற்ற முடியவில்லை என்றால் ஏன் வாக்குறுதி கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார். ஆசிரியர்கள் நிலைமையை பார்த்தால் மிகவும் பாவமாக இருக்கிறது. என்னிடம் இமெயில் மூலமாகவும் நேரடியாகவும் கோரிக்கை வைத்தாக பேசிய அன்புமணி,
சென்னை மக்களே தயாராக இருங்கள். படகு வாங்கி வைத்து கொள்ளுங்கள். பொருட்களை பாதுகாப்பாக மொட்டை மாடியில் வைத்து கொள்ளுங்கள் – மக்களுக்கு அட்வைஸ் சொன்ன அவர், திமுக பொய் சொல்லலாம் ஆனால் கொஞ்சம் கூட உறுத்தல் இல்லையா என்றார்
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள் திருவண்ணாமலை பெரிய மாவட்டம். அந்த மாவட்டத்தை இரண்டாக பிரிக்கலாம். ஆனால் பிரிக்கமாட்டார்கள் ஏனென்றால் அங்கு குறுநில மன்னர் இருக்கிறார் அவர் (எ.வா.வேலு) பிரிக்க விடமாட்டார் என கூறிய அவர், சமுக நீதி குறித்து கூட்டணி கட்சி முதலமைச்சர் சித்தராமையாவிடம் கேட்டு தெரிந்துகொள்ளட்டும்
திமுக சமுக நீதி துரோகிகள் விரோதிகள் என பேசினார்..
