விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் புது விநாயகர் மண் சிலை வைத்து அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்தமான கொலுக்கட்டை, சுண்டல் உள்ளிட்டவற்றை படைத்து வழிபட்டு வருகின்றனர். அதேப் போல இந்து அமைப்பினர் பெரிய பெரிய சிலைகளை நிறுவி பூஜை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ”வினைகளைத் தீர்த்து வெற்றிகளை வழங்கிடும் மங்கள நாயகன். கேட்கும் வேண்டுதலுக்கு செவிசாய்த்து அருள் பாலிக்கும் அருகம்புல் பிரியன். அனைத்திற்கும் முதலான தெய்வமாக வணங்கப்படும் கணபதியைச் சிறப்போடு கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரின் வாழ்விலும் செல்வம், வளம், ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கிட விநாயகப் பெருமானை மனதார வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.