நடிகர் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எளிமையாக வீட்டில் நடந்து முடிந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தற்போது மகுடம் படத்தில் நடித்து வருகிறார். 48 வயதை நெருங்கிய விஷாலுக்கு எப்போது திருமணம் என கேள்வி எழுந்த போது நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனக்கு திருமணம் என விஷால் உறுதியாக கூறி வந்தார்.
இந்த சூழலில் சென்னையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் பங்கேற்றனர். அப்போது விஷால் உடனான காதலை அனைவர் முன்னிலையிலும் அறிவித்த சாய் தன்ஷிகா, ஆகஸ்ட் 29 ஆம் தேதி இருவர்ம் திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
தற்போது நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் நிறைவு பெறாத சூழலில், விஷால் சொன்னப்படி அவரது திருமணம் சொன்னப்படி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் விஷால் – சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் அவரின் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றுள்ளது. இந்த நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும், கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் விஷால் – சாய் தன்ஷிகா ஜோடிக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.