Close Menu
    What's Hot

    ரயில்ஒன் செயலியில் டிக்கெட் எடுத்தால் 3 சதவீதம் தள்ளுபடி

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    “திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வது ஏன்?” – துரை வைகோ விளக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்… சசிகலா அறிக்கை…
    அரசியல்

    செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்… சசிகலா அறிக்கை…

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் என சசிகலா அறிக்கை தெரிவித்துள்ளார்.

    அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை 10 நாட்களுக்குள் ஒன்று சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆராம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம் இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்ததுபோல் “இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர் தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை நிரூபித்துள்ளார்.

    கழகம் ஒன்றுபட வேண்டும் என செங்கோட்டையன் அவர்களின் கருந்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.

    அன்பு சகோதரர் செங்கோட்டையன் அவர்களைப் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. திமுகளின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

    இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே, திமுக என்ற தீயசக்தி நம்கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் நடைபோட்டு தடுத்தாலும்

    அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும். செறுக்கோடும் மிளிரும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்! நாளை நமதே! வெற்றி நிச்சயம்! பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க! புரட்சித்தலைவர் நாமம் வாழ்க! புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க! நன்றி வணக்கம்” என தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெங்கோட்டையனுக்கு பக்க பலமாக இருப்போம்… ஓபிஎஸ் கருத்தால் கலங்கிய இபிஎஸ்…
    Next Article செங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் – சசிகலா திடீர் அறிக்கை
    Editor TN Talks

    Related Posts

    ராகுலை சந்திக்கும் விஜய்? பரபரக்கும் காங்கிரஸ் வட்டாரம்!

    December 30, 2025

    ராகுலின் நண்பர் மீது செல்வப்பெருந்தகை புகார்

    December 30, 2025

    கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரயில்ஒன் செயலியில் டிக்கெட் எடுத்தால் 3 சதவீதம் தள்ளுபடி

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    “திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வது ஏன்?” – துரை வைகோ விளக்கம்

    ஜோதிட நாள்காட்டி 31.12.2025 | மார்கழி 16

    12 ராசிகளுக்கான ராசிபலன்கள் ! இன்று உங்களுக்கு நாள் எப்படி?

    Trending Posts

    ரயில்ஒன் செயலியில் டிக்கெட் எடுத்தால் 3 சதவீதம் தள்ளுபடி

    December 31, 2025

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025

    “திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வது ஏன்?” – துரை வைகோ விளக்கம்

    December 31, 2025

    ஜோதிட நாள்காட்டி 31.12.2025 | மார்கழி 16

    December 31, 2025

    12 ராசிகளுக்கான ராசிபலன்கள் ! இன்று உங்களுக்கு நாள் எப்படி?

    December 31, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.