Close Menu
    What's Hot

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“கோடைக்காலப் பேரழிவைத் தற்போதே தடுப்போம்”!. செல்வப்பெருந்தகை பதிவு!
    தமிழ்நாடு

    “கோடைக்காலப் பேரழிவைத் தற்போதே தடுப்போம்”!. செல்வப்பெருந்தகை பதிவு!

    Editor web3By Editor web3March 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோடை காலத்தில் அலட்சியமாக இருப்பது பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அதிக வெப்பநிலை மற்றும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையால் தீ விபத்துகள், வெப்பஅலை பாதிப்புகள் மூலம் உயிர்கள் மற்றும் பிற சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

    பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்கம்பிகள், மின்சாதனங்கள் பாதுகாப்பான நிலையிலுள்ளனவா என பரிசோதனை செய்ய வேண்டும். ஓவர்லோடு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் தீப்பெட்டி, பட்டாசு போன்ற பொருட்களுடன் விளையாடுவதை கண்காணிக்க வேண்டும். காடு மற்றும் வெளிப்புற பகுதிகளில் சிகரெட் துண்டுகள் போன்றவற்றை அலட்சியமாக எறிவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் சிறிய தீயணைப்பு கருவி வைத்திருப்பது பாதுகாப்பான நடைமுறையாகும்.

    தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட தீயணைப்பு துறைகள் கோடை கால சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தீயணைப்பு வாகனங்கள், நீர்த் தொட்டிகள் மற்றும் அவசர உபகரணங்கள் அனைத்தும் செயல்பாட்டில் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி அவசர எண்கள் பற்றிய தகவலை பரப்ப வேண்டும்.

    வெடி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வெப்பநிலை கட்டுப்பாடு, பாதுகாப்பான சேமிப்பு மற்றும் மின்கசிவு தடுப்பு நடவடிக்கைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அரசு விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வெப்பஅலை எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு, குடிநீர் மற்றும் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.  காடுகளில், தீ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

    கோடை காலத்தில் அலட்சியமாக இருப்பது பேரழிவிற்கு வழிவகுக்கும். ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் தீ விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிளாத்திகுளம் மாணவி கொலை!. குற்றவாளி பிடிபட்ட பிறகும் ஓயாத சர்ச்சை!. அண்ணாமலை எழுப்பும் சந்தேகங்கள்!
    Next Article கம்பீர் அதிரடி!. ‘டீப்ஃபேக்’ வீடியோக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!
    Editor web3
    • Website

    Related Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    June 10, 2026

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.