சென்னையில் ஒருகிராம் ஆபரண தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த 29ம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து வந்தனர். ஆனால், நேற்று முன் தினம் தங்கம் விலை சற்று குறைந்தது.
இவ்வளவு நாளாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை குறைந்ததால் மக்கள் பெருமூச்சு விடுவதற்குள் நேற்று அதிரடியாக விலை மேலும் மறுபடியும் உயரந்தது. அதாவது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து ரூ.78,920க்கு விற்கப்பட்டது. கொரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.70 உயர்ந்து ரூ.9,865க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த சுழுஅலில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றில் முதன்முறையாக ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒருகிராம் தங்கத்தின் விலையில் ரூ.240 உயர்ந்து ரூ.10,005 க்கும் ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.89,040 க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் 10 ஆயிரம் ரூபாயை கடந்து விற்கப்படுவது ஏழை எளிய மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
`