Close Menu
    What's Hot

    யானைகளுக்கு சிகிச்சை.. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு NO சொன்ன சென்னை ஐகோர்ட்..!!

    3வது நாடக உருவெடுத்துள்ள இந்தியா..! பிரதமர் மோடி பெருமிதம்.!

    வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்.. இந்தியாவில் வருகிறதா பிளாஸ்டிக் கரன்சி? டெண்டர் கோரிய RBI..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடி குடும்பங்கள் இணைப்பு..
    அரசியல்

    ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடி குடும்பங்கள் இணைப்பு..

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    New Project
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக முன்னெடுத்துள்ள ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை ஒரு கோடி குடும்பங்கள் இணைந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோர் கூறியுள்ளனர்.

    இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் கூறியதாவது..

    தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க திமுக முன்னெடுத்த ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. திமுகவின் 7 லட்சம் தொண்டர்கள் அந்த பணியில் ஈடுபட்டனர்; இந்த 70 நாட்களில் தமிழ்நாட்டில் இருக்கின்ற 68,000 வாக்குச்சாவடிகளிலும் சென்று தமிழ்நாடு முழுக்கவும் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைத்துள்ளன.

    இரண்டாவது கட்டமாக வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி மண், மொழி, மானம் காக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இக்குடும்பங்கள் உறுதிமொழியை முன்மொழிய உள்ளன.
    வரும்17 ஆம் தேதி கரூரில் நடைபெற இருக்கின்ற முப்பெரும் விழாவில் அந்த உறுதிமொழியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லட்சக்கணக்கான மக்களின் முன்பாக எடுக்க உள்ளார்.

    அடுத்த கட்டமாக செப். 20, 21 ஆகிய தேதிகளில் திமுக சார்பில் கழக மாவட்ட அளவில் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழியை வழிமொழிந்து தமிழ்நாடு முழுக்க தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.

    ‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்’ என்ற பிரகடனத்தை தமிழ்நாடு முழக்க கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் லட்சக் கணக்கான மக்கள் பங்கு பெறும் அளவில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

    இப்படிப்பட்ட ஒரு நிகழ்வினை இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்தது இல்லை என்ற அளவிற்கு மூன்று கட்டங்களாக, 70 நாட்களுக்கு முன்னால் தொடங்கிய இந்த இயக்கம் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இதனை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆசிய கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்தாகுமா?
    Next Article எம்.பி.நவாஸ் கனிக்கு எதிரான வழக்கு.. சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    போராட்டமின்றி மதுக்கடைகளை அகற்றிய முதல் அரசு தவெக தான்.. அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்..!!

    July 18, 2026

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    July 17, 2026

    ” ம.பொ.சி., சிவாஜி கட்சி கதிதான்… மதிமுக விரைவில் காணாமல் போகும்”

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    யானைகளுக்கு சிகிச்சை.. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு NO சொன்ன சென்னை ஐகோர்ட்..!!

    3வது நாடக உருவெடுத்துள்ள இந்தியா..! பிரதமர் மோடி பெருமிதம்.!

    வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்.. இந்தியாவில் வருகிறதா பிளாஸ்டிக் கரன்சி? டெண்டர் கோரிய RBI..!!

    மீண்டும் திறக்கப்படும் அம்மா மினி கிளினிக்குகள்..!! அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட் நியூஸ்..!!

    போராட்டமின்றி மதுக்கடைகளை அகற்றிய முதல் அரசு தவெக தான்.. அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.