Close Menu
    What's Hot

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்-1..!!

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சிறைகளில் கழிவறை இவ்வளவு மோசமா?…
    தமிழ்நாடு

    சிறைகளில் கழிவறை இவ்வளவு மோசமா?…

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Caste Prison 2640 x 1100 px 1268 x 664 px
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கழிவறைகளை பராமரிக்கவும், அதற்கான பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு கழிவறைகள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை எனக் கூறி, வழக்கறிஞர் கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு கைதிகளே நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அதற்கான உபகரணங்களான முக கவசம், கையுறைகள், காலணிகள் போன்றவை வழங்கப்படுவதில்லை. தமிழ்நாடு சிறை விதிகளின் அடிப்படையில் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    சிறைகளில் கழிவறைகளை பராமரித்து சுத்தப்படுத்துவது குறித்து அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், ஏற்கனவே, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சிறைகளை திடீர் ஆய்வு செய்துள்ளார். அதில் சிறைகளில் உள்ள கழிவறைகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதேபோல் டெல்லி உயர் நீதிமன்றமும் அந்த மாநிலத்தில் உள்ள சிறைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் உள்ள கழிவறைகளை பராமரிக்குமாறு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

    இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த விஷயத்தில் பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது. தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தால் விசாரித்து உத்தரவிட முடியும் என்று தெரிவித்து விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎம்.பி.நவாஸ் கனிக்கு எதிரான வழக்கு.. சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
    Next Article ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தை பயன்படுத்த தடை விதித்த நீதிமன்றம்
    Editor TN Talks

    Related Posts

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    July 17, 2026

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    July 17, 2026

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்-1..!!

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.