தவெக தலைவர் விஜய் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக கட்சியை தொடங்கிய விஜய் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து செப்டம்பர் 13ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்து மக்களை சந்தித்து பேசி வருகிறார். விஜய்யின் இந்த சுற்றுப்பயணம் டிசம்பர்20ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் பரப்புரை செய்த விஜய் 3 நிமிடம் மாட்டுமே பேசினார். தொடர்ந்து கடந்த 2 வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை மற்றும் திருவாரில் விஜய்யின் பரப்புரை நடைபெற்றது. ஒவ்வொரு சனிக்கிழமையும், இதனை தொடர்ந்து நாளை மறுநாள் நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை செய்ய உள்ளார்.
இந்த நிலையில், விஜய்யின் சுற்றுப்பயணம் பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. டிசம்பர் 20ம் தேதியுடன் தனது சுற்றுப்பயணத்தை விஜய் முடிக்க இருந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறாது. சனிக்கிழமை மட்டுமே செய்து வந்த பிரசார பரப்புரை ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் என கூறப்படுகிறது.