கரூர் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் நாளை காலை முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரம் கரூரில் நடைபெற்றது. விஜய்யின் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான தொண்டர்கள் வருகை தந்தனர். அளவுக்கு அதிகமாக கட்டுக்கடங்காமல் கூட்டம் வருகை தந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலருக்கு மூச்சுத்திணறலும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. பெண்களும், குழந்தைகளும் கூட்ட நெரிசலில் சிக்கியதால் சுமார் 31 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சம்பவ இடத்திற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டம் ஒழுங்கு டிஜிபி உள்ளிட்டோர் விரைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிகப்பட்டு வரும் நிலையில் கரூரில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூருக்கு நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.