ஒரு வேன் கிடைத்துவிட்டது என அதன் மீது ஏறி எல்லா இடங்களிலும் இபிஎஸ் ஒப்பாரி வைத்து மூன்றாம்தர அரசியல் செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமரிச்த்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், மக்கள் பிரச்சனைக்கு நாங்கள் தான் முதலில் வாய் திறக்கிறோம். கண்டனம் தெரிவிக்கிறோம். ஆணவ படுகொலைக்கு சட்ட இயற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம். மக்கள் பிரச்சனையில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது.
எல்லா பிரச்சனைக்கும் காங்கிரஸ் போராடிக்கொண்டு தான் இருக்கிறது. இபிஎஸ் பேப்பர் படிப்பதில்லை. அவருக்கு அரசியலும் தெரிவதில்லை. வாய்க்கு வந்ததுபோல் பேசுகிறார்.எங்களுக்கு இபிஎஸ் போல அநாகரீகமாக, கொச்சையாக பேச தெரியாது.
இபிஎஸ் சட்டப்பேரவையிலேயே இருப்பதில்லை. காலையில் வருவார் எழுந்து பேச வேண்டும் என்பார். வெளிநடப்பு செய்துவிடுவார். உதய்மின் திட்டம், நீட், ஜிஎஸ்டியை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். ஆனால், அதில் இபிஎஸ் கையெழுத்து போட்டுள்ளார். தமிழ்நாட்டு உரிமைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டு, அடிமைத்தனம் செய்பவர் எங்களைப் பற்றி பேச தகுதி இருக்கிறதா?
இன்றைக்கு அதிமுகவின் நிலைமை என்ன என்று அனைவருக்கும் தெரியும். ஒரு எதிர்க்கட்சித் தலைவர், ஒரு முன்னாள் முதலமைச்சர் பேசும் பேச்சா இதுஎல்லாம்? பக்குவமாக பேசத் தெரியாதவர். மற்ற கட்சியை பற்றி ஏன் பேச வேண்டும்? ஒரு வேன் கிடைத்துவிட்டது என அதன் மீது ஏறி எல்லா இடங்களிலும் இபிஎஸ் ஒப்பாரி வைக்கிறார். ஒருமையாக, தரக்குறைவாக, கொச்சப்படுத்தி பேசுகிறார். பிச்சக்காரன், ஒட்டுப்போட்ட சட்டை போட்டவன் என்றெல்லாம் பேசுவது ஒரு தலைவருக்கு அழகானதா என கேள்வி எழுப்பியுள்ளார்.