Close Menu
    What's Hot

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»அரசியல்»வேன் மேல் ஏறி ஒப்பாரி வைக்கும் இபிஎஸ்
    அரசியல்

    வேன் மேல் ஏறி ஒப்பாரி வைக்கும் இபிஎஸ்

    Editor TN TalksBy Editor TN TalksOctober 12, 2025Updated:October 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒரு வேன் கிடைத்துவிட்டது என அதன் மீது ஏறி எல்லா இடங்களிலும் இபிஎஸ் ஒப்பாரி வைத்து மூன்றாம்தர அரசியல் செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமரிச்த்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், மக்கள் பிரச்சனைக்கு நாங்கள் தான் முதலில் வாய் திறக்கிறோம். கண்டனம் தெரிவிக்கிறோம். ஆணவ படுகொலைக்கு சட்ட இயற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம். மக்கள் பிரச்சனையில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது.

    எல்லா பிரச்சனைக்கும் காங்கிரஸ் போராடிக்கொண்டு தான் இருக்கிறது. இபிஎஸ் பேப்பர் படிப்பதில்லை. அவருக்கு அரசியலும் தெரிவதில்லை. வாய்க்கு வந்ததுபோல் பேசுகிறார்.எங்களுக்கு இபிஎஸ் போல அநாகரீகமாக, கொச்சையாக பேச தெரியாது.

    இபிஎஸ் சட்டப்பேரவையிலேயே இருப்பதில்லை. காலையில் வருவார் எழுந்து பேச வேண்டும் என்பார். வெளிநடப்பு செய்துவிடுவார். உதய்மின் திட்டம், நீட், ஜிஎஸ்டியை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். ஆனால், அதில் இபிஎஸ் கையெழுத்து போட்டுள்ளார். தமிழ்நாட்டு உரிமைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டு, அடிமைத்தனம் செய்பவர் எங்களைப் பற்றி பேச தகுதி இருக்கிறதா?

    இன்றைக்கு அதிமுகவின் நிலைமை என்ன என்று அனைவருக்கும் தெரியும். ஒரு எதிர்க்கட்சித் தலைவர், ஒரு முன்னாள் முதலமைச்சர் பேசும் பேச்சா இதுஎல்லாம்? பக்குவமாக பேசத் தெரியாதவர். மற்ற கட்சியை பற்றி ஏன் பேச வேண்டும்? ஒரு வேன் கிடைத்துவிட்டது என அதன் மீது ஏறி எல்லா இடங்களிலும் இபிஎஸ் ஒப்பாரி வைக்கிறார். ஒருமையாக, தரக்குறைவாக, கொச்சப்படுத்தி பேசுகிறார். பிச்சக்காரன், ஒட்டுப்போட்ட சட்டை போட்டவன் என்றெல்லாம் பேசுவது ஒரு தலைவருக்கு அழகானதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

    ADMK congress EPS selvaperunthagai
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article6 அமாவாசைகள் தான் உள்ளதாக ஆரூடம் சொன்ன அதிமுக புள்ளி
    Next Article கரூர் வழக்கில் இன்று தீர்ப்பு – தவெகவுக்கு சாதகமாகுமா? பாதகமாகுமா?
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுக் கடைகள் எவையெவை? டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை

    June 15, 2026

    சி.வி.சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை – அட்டாக் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி

    June 15, 2026

    சினிமா வசனம் தேவையில்லை; போர்க்கால நடவடிக்கை எப்போது? – முதல்வருக்கு டிடிவி கேள்வி

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    திருச்சி : தவெக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்..! தவெக நிர்வாகிகளின் அட்டூழியம்..!

    ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக்: ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் வெற்றி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.