ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டங்கள் தற்பொழுது எந்த நிலையில் இருக்கிறது என்பதை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நடப்பாண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றம் கூட உள்ளது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கேன்.என்நேரு, ஐ.பெரியசாமி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், பாமக சட்டமன்ற குழுத்தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய மூன்று துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இந்த 3 துறைகளில் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள், ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டங்கள் தற்பொழுது எந்த நிலையில் இருக்கிறது என்பதை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.