Close Menu
    What's Hot

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அச்சமின்றி அனைத்தையும் உடைதெறிவோம் – விஜய் வெயிட்ட மெசேஜ்
    அரசியல்

    அச்சமின்றி அனைத்தையும் உடைதெறிவோம் – விஜய் வெயிட்ட மெசேஜ்

    Editor TN TalksBy Editor TN TalksOctober 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    f421dfe0 b3e8 11ef 9e95 3339f02d261e.png
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக பொதுக்குழு கூட்டம் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெறுவதாக அக்கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது.

    சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் ‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்’, அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.
    தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை, அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது. இதை, நாம் சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர். சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர்.

    கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான், நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும்.

    இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர்நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும். ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி, வருகிற 05.11.2025 புதன்கிழமை அன்று, நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    வாருங்கள், சிறப்புப் பொதுக்குழுவில் கூடுவோம். வருங்காலம் நமதென்று காட்ட, தீர்க்கமாகத் திட்டமிடுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Actor Vijay Karur TVK tvk vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜரான பிரபல நடிகர்
    Next Article முதல் ஆளாய் பசும்பொன் வந்த துணை குடியரசு தலைவர் – தேவருக்கு முதல் மரியாதை
    Editor TN Talks

    Related Posts

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    December 24, 2025

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    December 24, 2025

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    Trending Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    December 24, 2025

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    December 24, 2025

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    December 24, 2025

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.