Close Menu
    What's Hot

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி
    விளையாட்டு

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ktk teams
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பை போட்டியில், 413 ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்து கர்நாடக அணி வெற்றி பெற்றுள்ளது.

    குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான ஜார்க்கண்ட், கர்நாடகா இடையேயான போட்டி, அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 412 ரன்களை எடுத்தது.

    அந்த அணி வீரர் இசான் கிஷன் 33 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி, அதிவேக சதம் அடித்தோர் பட்டியலில் இணைந்தார். மொத்தம் 39 பந்துகளில் 125 ரன்களை எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகள், 14 சிக்சர்களும் அடங்கும்.

    பின்னர் 413 என்ற இமாலய இலக்கை வைத்து கர்நாடக அணி களமிறங்கியது. இமாலய இலக்கு என்பதால், கர்நாடக அணியால் சேசிங் செய்ய முடியாது என கருதப்பட்டது. ஆனால் அந்த அணி வீரர்கள் அதை தனது அதிரடி பேட்டிங்கால் பொய்யாக்கினர்.

    மயங்க் அகர்வால் 54, தேவ்தத் படிக்கல் 147, அபினவ் மனோகர் 56, துருவ் பிரபாகர் 40 என அந்த அணி வீரர்கள் அதிரடி காட்டினர். இதனால் 47.3வது ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 413 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

    ஆட்டநாயகன் விருது, கர்நாடக அணியின் வெற்றிக்கு வித்திட்ட அந்த வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகளை ரேப் செய்தவருக்கு தூக்குத் தண்டனை! நெல்லை கோர்ட் தீர்ப்பு
    Next Article ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!
    Editor TN Talks

    Related Posts

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    July 22, 2026

    எல்லாம் முடிந்துவிட்டது; இனி அமைதியாக உட்கார்ந்து கை தட்ட வேண்டியதுதான்!. சஞ்சு சாம்சன் பரபரப்பு பேட்டி!

    July 22, 2026

    வெற்றியுடன்.. ராஜாவாக தாயகம் திரும்பிய ஸ்பெயின் வீரர்கள்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.