Close Menu
    What's Hot

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»எல்லாம் முடிந்துவிட்டது; இனி அமைதியாக உட்கார்ந்து கை தட்ட வேண்டியதுதான்!. சஞ்சு சாம்சன் பரபரப்பு பேட்டி!
    விளையாட்டு

    எல்லாம் முடிந்துவிட்டது; இனி அமைதியாக உட்கார்ந்து கை தட்ட வேண்டியதுதான்!. சஞ்சு சாம்சன் பரபரப்பு பேட்டி!

    Editor web3By Editor web3July 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sanju samson helmet issue
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அணியில் வாய்ப்பு மறுக்கப்படுவது, ஐ.பி.எல் சாதனைகள் மற்றும் 2026 டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது எனப் பல அனுபவங்களைக் கடந்து வந்துள்ள அவர், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தனக்குக் கூறிய அறிவுரை மற்றும் இஷான் கிஷனுடனான போட்டி குறித்து மனம் திறந்துள்ளார்.

    ஜியோஹோட்ஸ்டாருக்கு அவர் அளித்த பேட்டியில், 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் தொடக்கக் கட்டத்தில் தனக்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ரோகித் சர்மா தனக்கு ஆறுதல் கூறி, உலகக் கோப்பையில் பிற்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்ததாக கூறினார்.  உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்த நேரத்தில் நான் அவரை நம்பவில்லை. அவர் தனது மனதிலிருந்தோ அல்லது தனது அனுபவத்திலிருந்தோ பேசியிருக்கலாம்; ஆனால், அன்று அவர் பார்த்ததை என்னால் பார்க்க முடியவில்லை. அந்த சோகமான கட்டத்திலிருந்து மீண்டு வர எனக்கு நான்கு அல்லது ஐந்து நாள்கள் ஆனது. நீங்கள் தோற்றுவிட்டீர்கள், அடுத்து என்ன? நீங்கள் படுகுழிக்குச் சென்றுவிட்டீர்கள், அங்கிருந்து உங்களால் மேலே மட்டுமே வர முடியும். நான் என்னை மனரீதியாக மாற்றிக்கொள்ளத் தொடங்கினேன். நான் ஏன் கிரிக்கெட் விளையாடுகிறேன்? எனது நோக்கம் என்ன? என்று எனக்கு நானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.

    தனது மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் தனக்குப் பதிலாக இஷான் கிஷன் முன்னிலை பெற்றது குறித்தும் சஞ்சு சாம்சன் வெளிப்படையாகப் பேசினார். “நான் 24, 6, 6, 10 மற்றும் 0 என ரன்களை மட்டுமே எடுத்தபோது, மற்றொரு வீரர் (இஷான் கிஷன்) வந்து நேராக 70 ரன்களுக்கு மேல் அடித்து, தொடரில் சதமும் அடித்தார். அதன் பிறகு அடுத்த போட்டியே நேரடியாக டி20 உலகக் கோப்பைதான். யாராக இருந்தாலும் ஃபார்மில் இருக்கும் வீரருக்குத்தான் முன்னுரிமை அளிப்பார்கள். உலகக் கோப்பை எனக்கு முடிந்துவிட்டது என்பது தெளிவாகிவிட்டது. அடுத்து நடக்க வேண்டியது நடந்துவிட்டது, என்னால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான், அமைதியாக உட்கார்ந்து கை தட்டுவதுதான்” என்று அவர் குறிப்பிட்டார்.

    மேலும், கடினமான அந்தக் காலகட்டத்தில் தனது மனைவி தனக்கு அளித்த ஆதரவையும், மனநிலையை மாற்றியமைக்க அவர் உதவியதாகவும் சஞ்சு சாம்சன் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

    I didn't believe him India batter Sanju Samson Ishan Kishan rohit Sanju Samson opens up T20 World Cup
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!
    Next Article நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!
    Editor web3
    • Website

    Related Posts

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    July 22, 2026

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    July 22, 2026

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.