Close Menu
    What's Hot

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!
    Featured

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

    editor5By editor5July 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 18 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியான காலத்திலிருந்தே தமிழகத்தில் இருந்துதான் எதிர்ப்புக் குரல் ஒலித்தது என்றும், அந்தக் குரல் இன்று முழு இந்திய அளவில் எதிரொலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மாணவர்கள் ஜனநாயக வழியில் அறவழிப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், மத்திய அரசு அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று, கடுமையாகத் தாக்கி கைது செய்வதை வன்மையாகக் கண்டித்துள்ளார் அமைச்சர். “மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை உணராமல் அரசு நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என்று விமர்சித்தார். டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அமைதியான போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியை காவல்துறை இழுத்துச் சென்று கைது செய்த சம்பவத்தையும் அவர் கடுமையாகக் கண்டித்தார். இது ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் என்று சுட்டிக்காட்டினார்.

    மத்திய அரசு மாணவர்களின் நலனுக்கு எதிராகக் கொண்டுவந்த நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார். மேலும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். “நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்களின் உரிமைக் குரலுக்கும், அவர்களின் நலனுக்கும் தமிழக அரசு என்றும் துணையிருக்கும்” என்று உறுதியளித்தார்.

    தமிழகத்தில் தொடங்கிய நீட் எதிர்ப்பு இயக்கம் தேசிய அளவில் பரவி, பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் தீவிரமாகப் போராடி வரும் சூழலில், அமைச்சரின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

    Adhav Arjuna rahul gandhi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்த தடை!. ஐரோப்பிய யூனியனில் முதல் நாடாக சட்டம் இயற்றியது பிரான்ஸ்!
    Next Article எல்லாம் முடிந்துவிட்டது; இனி அமைதியாக உட்கார்ந்து கை தட்ட வேண்டியதுதான்!. சஞ்சு சாம்சன் பரபரப்பு பேட்டி!
    editor5

    Related Posts

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    July 22, 2026

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    July 22, 2026

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.