Close Menu
    What's Hot

    பொங்கல் தொகுப்பு விநியோகம்!. வரும் 8ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்?

    காய் நகர்த்தும் செங்கோட்டையன்!. விருப்பமனு அளிக்காத அதிமுக முக்கிய புள்ளிகள்!. அதிரடி உத்தரவிட்ட EPS!.

    பொங்கல் பரிசு தொகுப்பு!. டோக்கன் வினியோகம் எப்போது?. அதிகாரிகள் தகவல்!  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னைக்கு வரப் போகிறதா ஏர் டாக்சி? வெளியானது புதிய தகவல்!
    தமிழ்நாடு

    சென்னைக்கு வரப் போகிறதா ஏர் டாக்சி? வெளியானது புதிய தகவல்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025Updated:November 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    air taxi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மக்கள் பயணம் செய்யும் வகையில் எதிர்காலத்தில் மின்சார ஏர் டாக்சி சேவையை இயக்கலாம் என கும்டா பரிந்துரை செய்துள்ளது.

    சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA அல்லது கும்டா), சென்னையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு தேவையான பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்த தனது ஆய்வு அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது.

    அதில் 2023-ஆம் ஆண்டு முதல் 2048-ஆம் ஆண்டு வரையில், சென்னையில் பொது போக்குவரத்தான பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், விரைவு ரயில், புதிய வழித்தடங்கள், சாலை வசதி, சாலை அமைப்பு, பார்க்கிங் வசதிகள், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

    முக்கியமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின்சார பேருந்துகளுக்கும், மின்சார வாகனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, மின்சார படகு சேவையான ‘வாட்டர் மெட்ரோ’ மற்றும் மின்சார விமான சேவையையும் அமல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இதே நேரத்தில், சென்னை ஐஐடி-யில் இ-பிளேன் (ஏர் டாக்சி) தயாரிப்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதனை 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த ஐஐடியின் இ-பிளேன் குழுவினர் திட்டம் வகுத்து வருகின்றனர். இதற்காக சென்னையில் கட்டப்படும் உயரமான கட்டடங்களில் இறங்குத் தளம் அமைக்க வேண்டும் எனவும் சென்னை ஐஐடியின் இபிளேன் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    தற்போது, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் வழங்கி உள்ள திட்ட அறிக்கையில், ஏர் டாக்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மின்சாரத்தை பயன்படுத்தி செங்குத்தாக மேலே எழும்பும் வகையிலும், செங்குத்து நிலையில் கீழே இறங்கும் தொழில்நுட்பத்தைப் (eVTOL) பயன்படுத்தும் ஏர் டாக்சிகள், நகர்ப்புற இயக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் நகரம் முழுவதும் விரைவான, நேரடியான வழிகளில் பயணிக்க முடியும். இந்த ஏர் டாக்சிகள் நகர்ப்புற பயணிகளுக்கான பயண நேரத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது. குறைந்தபட்ச சத்தம் மற்றும் கார்பன் உமிழ்வற்ற எதிர்கால போக்குவரத்து தீர்வாக இது பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிஎஸ்பி சுந்தரரேசனுக்கு பிடிவாரண்ட் – குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    Next Article ‘நமது இசையை ஆய்வு செய்து காப்புரிமையை பெற வேண்டும்’ – ஆளுநர் ரவி
    Editor TN Talks

    Related Posts

    பொங்கல் தொகுப்பு விநியோகம்!. வரும் 8ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்?

    January 2, 2026

    காய் நகர்த்தும் செங்கோட்டையன்!. விருப்பமனு அளிக்காத அதிமுக முக்கிய புள்ளிகள்!. அதிரடி உத்தரவிட்ட EPS!.

    January 2, 2026

    பொங்கல் பரிசு தொகுப்பு!. டோக்கன் வினியோகம் எப்போது?. அதிகாரிகள் தகவல்!  

    January 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பொங்கல் தொகுப்பு விநியோகம்!. வரும் 8ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்?

    காய் நகர்த்தும் செங்கோட்டையன்!. விருப்பமனு அளிக்காத அதிமுக முக்கிய புள்ளிகள்!. அதிரடி உத்தரவிட்ட EPS!.

    பொங்கல் பரிசு தொகுப்பு!. டோக்கன் வினியோகம் எப்போது?. அதிகாரிகள் தகவல்!  

    பெரும் சோகம்!. உலகின் மிக அதிக எடை கொண்ட நபர் திடீர் மரணம்!. 

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல தொடக்க ஆட்டக்காரர் ஓய்வு!. உருக்கமான பேச்சு!. ஆரம்பித்த இடத்திலேயே முடிவு!. 

    Trending Posts

    திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்!. டேக்கனே தேவையில்லை!. பக்தர்களுக்கு ஃப்ரீ!.

    December 16, 2025

    பொங்கல் தொகுப்பு விநியோகம்!. வரும் 8ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்?

    January 2, 2026

    காய் நகர்த்தும் செங்கோட்டையன்!. விருப்பமனு அளிக்காத அதிமுக முக்கிய புள்ளிகள்!. அதிரடி உத்தரவிட்ட EPS!.

    January 2, 2026

    பொங்கல் பரிசு தொகுப்பு!. டோக்கன் வினியோகம் எப்போது?. அதிகாரிகள் தகவல்!  

    January 2, 2026

    பெரும் சோகம்!. உலகின் மிக அதிக எடை கொண்ட நபர் திடீர் மரணம்!. 

    January 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.