Close Menu
    What's Hot

    கர்நாடகாவில் வன்முறை!. பாஜக-காங்கிரஸ் மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்!. 

    2047-க்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் 6 மடங்கு உயரும்!. மக்களின் செலவினங்களும் அதிகரிக்கும் அபாயம்!.

    பழைய ஓய்வூதிய விவகாரம்!. நாளை அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»தனுஷ் சார் உங்க முகத்தில் அது இருக்கு ; இயக்குனர் கூறியதை மேடையில் போட்டுடைத்த தனுஷ் !!!
    சினிமா

    தனுஷ் சார் உங்க முகத்தில் அது இருக்கு ; இயக்குனர் கூறியதை மேடையில் போட்டுடைத்த தனுஷ் !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025Updated:November 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251123 000439
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் க்ரிட்டி சனோன் நடித்த “தேரே ஈஸ்ட் மெயின்” திரைப்படம் வரும் நவம்பர் 28ஆம் தேதி அன்று உலக அளவில் வெளியாகிறது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் பிரமோஷன் வேலைகள் நாளுக்கு நாள் நல்ல படியாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று படக்குழு திரைப்படத்தை பிரமோஷன் செய்ய டெல்லிக்கு வந்திருந்தனர்.

    20251123 000808

    இன்று டெல்லியில் நடந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் நகைச்சுவையாக ஒரு விஷயத்தை பரிமாறினார். “நான் என் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இடத்தில் முதலில் ராஞ்சனா, பின்னர் அட்ராஞ்சி ரே தற்போது தேரே இஷ்க் மெயின் இது போன்ற திரைக்கதையில் என்னை ஏன் தொடர்ந்து நடிக்க வைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் உங்களுடைய முகம் லவ் ஃபெயிலியர் முகம் ( காதல் தோல்வி கலந்த முகம் )என்று கூறினார்.

    அதைக் கேட்ட பின்னர் நான் கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன். நம் முகம் அப்படியா இருக்கிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும் நான் அதை ஒரு பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன்”, என்று தனுஷ் சற்று நகைச்சுவையுடன் கூறினார்.

    ஆனந்த் எல் ராய் தன்னுடைய முகத்தை லவ் ஃபெயிலியர் முகம் என்று தனுஷ் சொன்ன அடுத்த நொடியே படத்தின் கதாநாயகி க்ரிட்டி சனோன், “உங்களுக்கு இதயம் உடைந்த மனிதனின் முகம் இருக்கிறது”, என்று கூறினார். தனுஷ் நகைச்சுவையாக பேசிய அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    https://x.com/Its_CineHub/status/1992263923043897785?t=RCBRlQSQwRNknJwl6WX3Ag&s=19

    பாலிவுடில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த ராஞ்சனா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இவர்கள் இருவரது கூட்டணியில் அட்ராஞ்சி ரே திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இவர்கள் இருவரது கூட்டணியில் மூன்றாவது திரைப்படமாக வரும் நவம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் தேரே இஷ்க் மெயின் திரைப்படமும் நிச்சயமாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    20251123 003534

    A R Rahman Anand L rai dhanush Kriti Sanon Tere Ishq mein
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெஸ்ட் தொடரை தொடர்ந்து ஒரு நாள் தொடரிலும் வெளியேறிய கேப்டன் சுப்மன் கில் !!!
    Next Article புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து நவ.26-ம் தேதி பொது வேலைநிறுத்தம்
    Editor TN Talks

    Related Posts

    சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு!. சென்னை உயர்நீதிமன்றம்!.

    January 2, 2026

    வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்?

    December 30, 2025

    ஷாக்! சின்னத்திரை நடிகை நந்தினி தற்கொலை

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கர்நாடகாவில் வன்முறை!. பாஜக-காங்கிரஸ் மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்!. 

    2047-க்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் 6 மடங்கு உயரும்!. மக்களின் செலவினங்களும் அதிகரிக்கும் அபாயம்!.

    பழைய ஓய்வூதிய விவகாரம்!. நாளை அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!.

    சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு!. சென்னை உயர்நீதிமன்றம்!.

    “திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது அல்ல”!. திருமாவளவன் பேச்சு!

    Trending Posts

    திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்!. டேக்கனே தேவையில்லை!. பக்தர்களுக்கு ஃப்ரீ!.

    December 16, 2025

    கர்நாடகாவில் வன்முறை!. பாஜக-காங்கிரஸ் மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்!. 

    January 2, 2026

    2047-க்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் 6 மடங்கு உயரும்!. மக்களின் செலவினங்களும் அதிகரிக்கும் அபாயம்!.

    January 2, 2026

    பழைய ஓய்வூதிய விவகாரம்!. நாளை அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!.

    January 2, 2026

    சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு!. சென்னை உயர்நீதிமன்றம்!.

    January 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.