இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கூட டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணி வென்ற பின்னர் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.
போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்று முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி மொத்தமாக 489 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தென்னாபிரிக்க அணியில் அதிகபட்சமாக செனூரான் முத்துசாமி 109 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் நான்கு விக்கெடுகளை கைப்பற்றினார்.
முதல் இன்னிங்ஸில் மொத்தமாக முகமது சிராஜ் இரண்டு விக்கெடுகளை கைப்பற்றினார். குறிப்பாக போட்டியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த முத்துசாமியின் விக்கெட்டை முகமது சிராஜ் தான் கைப்பற்றினார். இன்று போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய பின், “இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மெட்டில் அதிக விக்கெடுகளை கைப்பற்றிய வேகப்பந்து பேச்சாளர் என்கிற சாதனைக்கு சிராஜ் சொந்தக்காரராகியுள்ளார்”.

https://x.com/StarSportsIndia/status/1992520500351045681?t=A8EWdip70mtludfOKyDOyA&s=19
இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மெட்டில் அதிக விக்கெடுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர்கள்
- முகமது சிராஜ் – 43 விக்கெட்டுகள்
- பிளசிங் முசாரபாணி – 42 விக்கெட்டுகள்
- மிட்செல் ஸ்டார்க் – 39 விக்கெட்டுகள்

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி தன்னுடைய இன்னிசை தொடங்கி எந்த விக்கெட்டையும் கைவிடாமல் மொத்தமாக 9 ரன்கள் சேர்த்துள்ளது. 480 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை மூன்றாம் நாள் இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்.

