Close Menu
    What's Hot

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை
    விளையாட்டு

    இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ravisas
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி​யின் தலை​மைப் பயிற்சியாள​ராக இந்​திய முன்​னாள் வீரரும், முன்​னாள் தலைமைப் பயிற்​சி​யாள​ரு​மான ரவி சாஸ்​திரியை நியமிக்க வேண்​டும் என்று இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி முன்​னாள் வீரர் மான்டி பனேசர் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

    இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவர் மான்டி பனேசர். இவர் இங்​கிலாந்து அணிக்​காக 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் வரை விளையாடி​யுள்​ளார். இந்​நிலை​யில் ஆஸ்​திரேலி​யா​வில் நடைபெற்று வரும் 5 போட்​டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்​கெட் தொடரில் இங்கிலாந்து அணி 0-3 என்ற கணக்​கில் படு​தோல்வி அடைந்​துள்​ளது. இந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் இன்​று தொடங்க உள்​ளது.

    ஆஷஸ் தொடரில் மோச​மாக செயல்​பட்டு வரு​வ​தால் இங்கிலாந்து அணிக்​கெ​தி​ராக கண்​டனக் கணை​கள் தொடுக்கப்பட்டு வரு​கின்​றன. அணி​யின் பயிற்​சி​யாள​ராக இருக்கும் பிரண்​டன் மெக்​கல்​லத்தை பதவியி​லிருந்து நீக்​க வேண்டும் என்​றும் கோரிக்​கைகள் வலுத்து வரு​கின்​றன.

    இந்​நிலை​யில், இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் பயிற்​சி​யாளர் ரவி சாஸ்​திரியை, இங்​கிலாந்து அணி​யின் பயிற்சியாளராக நியமிக்க வேண்​டும் என முன்​னாள் வீரர் பனேசர் பரிந்​துரை செய்​துள்​ளார்.

    இதுதொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: ஆஷஸ் தொடரில் இங்​கிலாந்து அணி​யின் செயல்​பாடு கவலை அளிக்​கிறது. எனவே, பயிற்​சி​யாளரை மாற்​று​வதற்​கான நேரம் வந்​து​விட்​டது. ஆஸ்​திரேலிய அணி​யின் பலவீனத்தை தெரிந்து வைத்​துள்ள ஒரு​வர் அடுத்த பயிற்​சி​யாள​ராக வரவேண்​டும் என்று நான் விரும்​பு​கிறேன்.

    ஆஸ்​திரேலி​யாவை வீழ்த்​து​வது எப்​படி என்​பதை அறிந்த ஒரு​வர் பற்றி நாம் சிந்​திக்க வேண்​டும். ஆஸ்​திரேலி​யா​வின் பலவீனம் மற்றும் அதன் யுக்​தியை எப்​படி சாதக​மாக பயன்​படுத்​திக் கொள்வது என அறிந்த பயிற்​சி​யாளர் நமக்கு தேவை. ரவி சாஸ்​திரி இங்​கிலாந்தின் அடுத்த தலைமை பயிற்​சி​யாள​ராக வர வேண்​டும் என்று நான் நினைக்​கிறேன். இவ்​வாறு மான்டி பனேசர் தெரி​வித்​துள்​ளார்.

    கடந்த 2017, 2021-ம் ஆண்​டு​களில் ரவி சாஸ்​திரி தலை​மைப் பயிற்சி​யாளா​ராக இருந்த போது இந்​திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்​ணில் வீழ்த்​தி டெஸ்ட்​ தொடர்​களை வென்​றது குறிப்​பிடத்​தக்​கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாட்மிண்டன் சம்மேளன ஆணைய தலைவராக பி.வி.சிந்து தேர்வு
    Next Article பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி
    Editor TN Talks

    Related Posts

    கில் – இஷான் அதிரடி! ரன் மழை பொழிந்த இந்தியா!. ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இமாலய இலக்கு!

    June 17, 2026

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    June 17, 2026

    2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்  இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சு

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    கில் – இஷான் அதிரடி! ரன் மழை பொழிந்த இந்தியா!. ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இமாலய இலக்கு!

    ‘டெலிகிராம்’ தடை மோடி அரசின் புதிய தந்திரமா? ராகுல் காந்தி கடும் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.