Close Menu
    What's Hot

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»என் அம்மா எனக்கு கொடுத்த அந்த கடிகாரம் தான் எனக்கு எப்பவும்… தனுஷ் எமோஷனல் !!!
    சினிமா

    என் அம்மா எனக்கு கொடுத்த அந்த கடிகாரம் தான் எனக்கு எப்பவும்… தனுஷ் எமோஷனல் !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20251124 194633
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    துபாயில் புர்ஜ் பார்க்கில் உள்ள மாலில் கடிகாரங்கள் வாரம் ( Watch Week ) நடைபெற்று முடிந்தது. கடந்த வாரம் 19ஆம் தேதி துவங்கி நேற்று 23ஆம் தேதி வரை இந்த கடிகாரங்களின் கண்காட்சி நடந்தது. இந்த கடிகார கண்காட்சியில் 90க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்களின் கடிகாரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. TAG Heuer, Zenith, Hublot, Tudor, Roger Dubuis மற்றும் பலரிடமிருந்து புதிய மற்றும் உன்னதமான கடிகாரங்கள் அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    இந்த கண்காட்சிக்கு நடிகர் தனுஷ் மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர்.

    20251124 195843

    அங்கே நடிகர் தனுஷிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கடிகாரம் என்று சொன்னவுடன் உங்களுக்கு என்ன நினைவு வரும், கடிகாரங்களைப் பொறுத்தவரை தனுஷின் முதல் காதல் என்ன என்று கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த தனுஷ் “ நான் பள்ளியில் படிக்கும் போது என் அம்மா எனக்கு வாங்கிக் கொடுத்த ஒரு கடிகாரம்தான் எனக்குப் பிடித்த முதல் கடிகாரம். அது ஒரு டாலருக்கும் குறைவானது ( இந்திய ரூபாயில் 90 ரூபாய்க்கும் குறைவான கடிகாரம் ). அதில் பெயர் இல்லை, அது ஒரு பிளாஸ்டிக் டிஜிட்டல் கடிகாரம், அது நேரத்தை மட்டுமே காண்பிக்கும்.

    அந்த கடிகாரத்தில் ஒரு விளக்கு இருக்கிறது. அந்த விளக்கு கடிகாரத்தின் பின்னாடி இருக்கும் பேட்டரி மூலம் எரியும்.

    ”நான் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வருகிறேன், எனவே பேட்டரிகள் தீர்ந்துவிட்டால் அவ்வளவுதான் உங்கள் கடிகாரம் முடிந்துவிட்டது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் கடிகாரம் முடிந்தது. அந்த மாடல் கடிகாரம் அப்பொழுது பல வண்ணங்களில் வந்தது. நானும் என் சகோதரிகளும் வயலட், மஞ்சள், பச்சை நிறங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம். அது பார்க்க மினுமினுப்பாகவும், பளபளப்பாகவும் இருந்தது.

    ஆனால் பேட்டரி செயலிழந்தபோதும், நான் அந்த கடிகாரத்தை அணிந்து பள்ளிக்குச் செல்வேன். அது நேரத்தைக் காட்டுவதை ஒரு கட்டத்தில் நிறுத்தியது, ஆனால் நான் அந்த கடிகாரத்தை இன்னும் வைத்திருக்கிறேன். அந்த கடிகாரத்தை தான் நான் மிகவும் விரும்பினேன். கடிகாரங்களில் என்னுடைய முதல் காதல் என் அம்மா எனக்கு கொடுத்த அந்த  கடிகாரத்தின் மீதுதான்”, என்று கூறினார்.

    https://tntalks.in/storage/2025/11/Dhanush_Trends_720p_20251124_195908-1.mp4

    110768046

    இந்த வாட்ச் வீக் நடப்பதற்கு முன்பாக 4113 என்ற என் சீரியஸை சேர்ந்த ரோலக்ஸ் வாட்ச் மாடல் இந்திய மதிப்பில் சுமார் 42 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போனது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு ரோலக்ஸ் வாட்ச் இந்த அளவுக்கு ஏலம் போனது இதுவே முதல் முறை.

    101 10

    இந்த 4113 சீரியசைச் சேர்ந்த ரோலக்ஸ் வாட்ச் மாடல் 1940ஆம் ஆண்டுகளில் வெறும் 12 வாட்சுகள் தான் தயாரிக்கப்பட்டன. அதில் தற்பொழுது ஒன்பது தான் மிஞ்சி உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் ரோலக்ஸ் வாட்ச் மாடல்களில் இந்த ஒரு மாடல்தான் விண்டேஜ் ஸ்பிளிட்-செகண்ட்ஸ் கால வரைபடத்தை கொண்ட வாட்ச் மாடல். அதனாலேயே தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    dhanush Love Mother Rolex 4113 Watch
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article27 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்து பிரியா விடைபெற்ற மான் !!!
    Next Article பிரதீப் ரங்கநாதன் சொன்னால் அது அப்படியே நடக்கும் – நடிகை கீர்த்தி ஷெட்டி உறுதி !!!
    Editor TN Talks

    Related Posts

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    December 24, 2025

    எப்ஸ்டீன் விவகாரம்!. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தவறானவை!. நீதித்துறை விளக்கம்!.

    December 24, 2025

    கிறிஸ்துமஸ் நாளிலாவது போரை நிறுத்துங்கள்!. போப் லியோ வருத்தம்!

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    அசாமில் வெடித்தது கலவரம் – 2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

    Trending Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    December 24, 2025

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    December 24, 2025

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.