Close Menu
    What's Hot

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    தங்கம் விலை மேலும் ரூ.560 உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»”மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
    அரசியல்

    ”மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ops admk 29 12 21 1659859274
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை என பல சட்ட விரோதச் செயல்கள் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கின்றன. இதன் விளைவாக, வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழ்நாடு மாறிக் கொண்டு வருகிறது.

    2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மணலை அள்ளிச் செல்லலாம், எந்த அதிகாரியும் தடுக்கமாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் சொன்னதை தமிழக மக்கள். மறந்திருக்க மாட்டார்கள்.

    2024 ஆம் ஆண்டு அமலாக்கத் துறை மேற்கொண்ட ஆய்வில் 28 குவாரிகளில் 987 எக்டேர் பரப்புக்கு சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு இருந்ததும், அதன் மதிப்பு 4,730 கோடி ரூபாய் என்றும் ஆனால் தமிழ்நாடு அரசுக்கு வெறும் 36 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

    அதாவது, 4,700 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது அமலாக்கத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை தலைமை இயக்குநருக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது.

    ஆனால், இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், கரூர் மாவட்டம், அமராவதி ஆற்றுப் பள்ளத்தாக்கில் மணல் குவாரிகள் அமைக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுவதாகவும், ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதைப் பயன்படுத்தி கரூர் மாவட்டத்தில் ராஜபுரம், சின்னதாராபுரம், அணைப்பாளையம், சுக்காலியூர், பெரிய ஆண்டாங்கோவில், கோயம்பள்ளி ஆகிய பகுதிகளில் மணல் திருட்டு அமோகமாக நடைபெற்று வருவதாகவும், இந்த மணல் திருட்டை காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் கண்டு கொள்வதில்லை என்றும், செய்திகள் வருகின்றன.

    அரசு அதிகாரிகள் இதைக் கண்டுகொள்ளாததிலிருந்தே ஆளும் கட்சியினரின் தலையீடு இருக்கிறது என்பது தெளிவாகிறது. இது நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல், மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதன்மூலம் நிலத்தடி நீர் குறைந்து, பொதுமக்கள் தண்ணீருக்கு அல்லல்பட வேண்டிய அவல நிலையும் உருவாகும். தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுக அரசுக்கு உண்டு.

    எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிச்சயதார்த்த வீடியோக்களை நீக்கினார் ஸ்மிருதி மந்தனா – தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் திருமணம் நிறுத்தம்
    Next Article திராவிடக் கட்சிகளின் பாணியில்… ‘இலவச’ பிரச்சாரத்துக்குத் தயாராகிறாரா விஜய்?
    Editor TN Talks

    Related Posts

    தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி! விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்

    December 26, 2025

    ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?

    December 26, 2025

    இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    தங்கம் விலை மேலும் ரூ.560 உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஹஜ் பயணம் மேற்கொள்ள ஜன.15-க்குள் பதிவு செய்ய அழைப்பு

    கம்பீரத்தின் அடையாளம் நாகூர் ஹனீபா: நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

    Trending Posts

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.