Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கம்பீரத்தின் அடையாளம் நாகூர் ஹனீபா: நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
    தமிழ்நாடு

    கம்பீரத்தின் அடையாளம் நாகூர் ஹனீபா: நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     ‘இசைமுரசு’ என்று போற்றப்படும் நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் 24-ம் தேதி நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸின் ‘இசைமுரசு நாகூர் ஹனீபா நூற்றாண்டு மலர்’ மற்றும் ‘இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா பாடல்கள் முழுத் தொகுதி’ ஆகிய நூல்களை வெளியிட்டார். ஹனீபாவின் குடும்பத்தினரை கவுரவித்தார்.

    ஹனீபாவின் ‘வரலாற்று சுவடுகள்’ புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் நூல்களுக்கான கருத்துரைகளை வழங்கினர்.

    முன்னதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ ஏ.கே.முகம்மது ஹனீபா வரவேற்புரை வழங்கினார். நிறைவாக, இ.எம்.ஹனீபா நவ்ஷாத் நன்றி கூறினார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்த நூற்றாண்டு விழா அழைப்பிதழைப் பார்த்தபோது எனக்கு ஒரு புகைப்படம் நினைவுக்கு வந்தது.

    ஒருபக்கம் முன்னாள் முதல்வர் கருணாநிதி, இன்னொரு பக்கம் பேராசிரியர் அன்பழகன். இவர்களது தோளில் உரிமையோடு கைபோட்டுக் கொண்டு நடுவில் கம்பீரமாக நிற்பார் நாகூர் ஹனீபா. அந்த இரு ஆளுமைகளின் தோளில் கைபோட்டு நிற்கும் துணிச்சல், நட்புறவு யாருக்கும் இருக்காது.

    அத்தகைய கம்பீரத்தின் அடையாளம்தான் நாகூர் ஹனீபா. நாகூரில் திமுக கிளையை தோற்றுவித்ததும் அவர்தான். ஒலிபெருக்கியே தேவையில்லாத குரல்வளம் அவருக்கு. `ஓடி வருகிறான் உதயசூரியன்’ என்று அவரது குரல் ஒலிக்காத திமுக நிகழ்ச்சியே கிடையாது.

    கல்லக்குடி போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த கருணாநிதியின் தீரத்தை ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்று பட்டிதொட்டி எல்லாம் கொண்டுபோய் சேர்த்தது அவரது குரல். உடலால் மறைந்தாலும், நம் உள்ளம், உணர்வில் அவரது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

    ஹனீபாவும், கருணாநிதியும் நகமும் சதையுமாக, நட்போடு பழகியவர்கள். இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். இதைத் தவிர அவர்கள் இடையே வேறு எந்த வேறுபாடும் கிடையாது.

    கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவரைக்கூட கேட்காமல் இசைக் கச்சேரியை அறிவித்து விடுவார் கருணாநிதி. எப்படி என்று கேட்டால் ‘நான் கச்சேரிக்காரன் அல்ல, கட்சிக்காரன்’ என்று ஹனீபா கூறுவார்.

    பெரியார், அண்ணா, கருணாநிதியின் புகழ் உள்ளவரை, நாகூர் ஹனீபாவின் புகழும் நிலைத்திருக்கும் என்று முதல்வர் கூறினார். இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், பரந்தாமன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி.க்கள்எம்.எம்.அப்துல்லா, அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதினமும் காலையில் இதை செய்தால் கேன்சர் வராது!. டிரை பண்ணுங்க!.
    Next Article ஹஜ் பயணம் மேற்கொள்ள ஜன.15-க்குள் பதிவு செய்ய அழைப்பு
    Editor TN Talks

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.