தவெகவா, திமுகவா ? என்ற கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டபடி செங்கோட்டையன் பதிலளிக்காமல் காரில் ஏறிச் சென்றார்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமை செயலகத்தில் இருந்து வெளிவந்த அவரிடம், தவெகவில் இணையப் போகிறீர்களா, திமுகவில் இணைய போகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு செங்கோட்டையன் நேரடியாக பதிலளிக்கவில்லை. கையெடுத்து கும்பிட்டபடி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, தலைமைச் செயலகத்தில் வைத்து திமுக அமைச்சர் சேகர்பாபு, செங்கோட்டையனுடன் சுமார் அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதனால் திமுகவில் செங்கோட்டையன் இணைவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
