இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சற்றுமுன் நடந்து முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணி வென்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி துவங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்காவின் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 489 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 201 ரன்கள் ஆட்டம் இழக்க 288 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸ்சை செய்து தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி நேற்று 260 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
548 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நேற்று மாலை விளையாட தொடங்கிய இந்திய அணி இரண்டு விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. இன்று கடைசி நாள் ஆட்டத்தில் குறைந்தபட்சம் ஆட்டத்தை சமனுக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 140 ரன்களுக்கு சுருண்டது.

இதன் மூலம் 408 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. அதோடு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியில் வைத்து தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெறுவது இது இரண்டாவது முறை. 2000 ஆம் ஆண்டில் ஹான்சி கிரோன்ஜி தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை அதன் மண்ணில் வைத்து வீழ்த்தியது. அதன் பின்னர் தற்பொழுது 25 ஆண்டுகள் கழித்து டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணி இந்திய அணியை அதன் மண்ணில் வைத்து வீழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்திய அணியை அதன் மண்ணில் வைத்து ஒயிட் வாஷ் செய்தது. இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியை அதன் மண்ணில் வைத்து ஒயிட் வாஷ் செய்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இந்திய அணி வீரர்களின் மீதும் கோச் கௌதம் கம்பீர் மீதும் கோபத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
