சொகுசு கார் வைத்திருப்பது ஒரு சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதைக் கடந்து அந்த சொகுசு காருக்கான என் தகடு ( நம்பர் பிளேட் ) பேன்சியாக வைத்திருப்பது இன்னும் சிலருக்கு பிடிக்கும். தங்களுடைய சொகுசு கார்களில் உள்ள Number Plate எண் பார்ப்பதற்கு வித்தியாசமாக மற்றும் பேன்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் நினைப்பார்கள்.
அரியானாவில் ஆன்லைன் மூலம் இந்த பேன்சி மற்றும் விஐபி எண்ணுக்கான ( Number Plate) ஆன்லைன் ஏலம் ஒவ்வொரு வாரமும் நடைபெறும். வெள்ளிக்கிழமை சாயங்காலம் 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 9 மணி வரை இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் தங்களுடைய விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம்.
அதன் பின்னர் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் புதன்கிழமை சாயங்காலம் 5 மணி வரை இந்த ஏலம் நடைபெறும். ஏலத்தின் முடிவுகள் புதன்கிழமை சாயங்காலம் 5 மணி அளவில் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் இந்த வாரம் நடந்து முடிந்துள்ள இடத்தில் HR88B8888 என்ற Number Plate எண் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் ஒரு Number Plate எண் இந்த அளவுக்கு ஏலம் போனது இதுவே முதல்முறை.

HR என்கிற எழுத்து வாகனம் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கும் மாநிலக் குறியீடாகும்.
88 என்பது வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள ஹரியானாவில் உள்ள குறிப்பிட்ட பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (RTO) அல்லது மாவட்டத்தைக் குறிக்கிறது.
குறிப்பிட்ட RTO-விற்குள் வாகனத் தொடர் குறியீட்டைக் குறிக்க B என்கிற எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
8888 என்பது வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட தனித்துவமான, ஒரே நான்கு இலக்க பதிவு எண்ணாகும்.
இந்த நம்பர் பிளேட்டை சாதாரணமாக பார்க்கையில் HR என்கிற எழுத்தை கடந்து மீதமுள்ள அனைத்தும் தொடர் எட்டு போல தான் காட்சி அளிக்கும் ( B என்கிற எழுத்து பார்ப்பதற்கு எட்டு போல இருக்கும் ).
இதற்காக தான் இவ்வளவு பெரிய தொகைக்கு இந்த நம்பர் பிளேட் எண் ஏலம் போய் உள்ளது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
