சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச. 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 2வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்தது. இடைவிடாது பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மழை நீர் வெளியேற்றம், வெள்ள பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து போலீசாரும் செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனையடுத்து கனமழையை முன்னிட்டு சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (டிச. 4) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
