Netflix நிறுவனம் வாரணர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை சுமார் 83 பில்லியன் டாலர்கள் கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் வாரனர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்திற்கு கீழ் வரும் HBO, HBO Max, Studio என அனைத்து உரிமத்தையும் Netflix நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இந்திய மதிப்பில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 630 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதை Netflix நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. வாரணர பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை கைப்பற்றும் ஏலப்போரில் பாரமௌண்ட ஸ்கை டான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
1923 ஆம் ஆண்டு நான்கு சகோதரர்களால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் நூற்றாண்டுக்கும் மேலாக தரமான படைப்புகளின் மூலம் உலகில் உள்ள நிறைய மக்களின் மனதை வென்றிருக்கிறது. முக்கியமாக டிசி காமிக்ஸ் (டிசி காமிக்ஸ்) மூலமாக நிறைய ஜனரஞ்சகமான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களை வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனம் தயாரித்துள்ளது. பேட்மேன் சூப்பர் மேன் அக்வா மேன் வொண்டர் வுமன் என எப்படி நிறைய படைப்புகளை கூறிக்கொண்டே போகலாம்.

இனி இவை அனைத்தும் netflix நிறுவனம் சொந்தம் கொண்டாட போகிறது. ஒரு சாதாரண ஒ டி டி தனமாக 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது உலகெங்கிலும் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள தொலைபேசியில் அல்லது தொலைக்காட்சியில் அல்லது கணினியில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 190 நாடுகளில் கிட்டத்தட்ட 31 கோடி சந்தாதாரர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய நிறுவனமாக Netflix நிறுவனம் உயர்ந்துள்ளது.
https://x.com/netflix/status/1996912825508462707?t=nqM2PvJWDatCAXam5UEb4w&s=19

பொதுவாக திரை உலகில் மார்வெல் மற்றும் டிசி காமிக்ஸ் இரண்டிற்கும் மிகப்பெரிய போட்டி இருக்கும். தற்பொழுது டிசி காமிக்ஸ் Netflix வசமாகிவிட்டதால், இனி நெட்டிக்ஸ் வெர்சஸ் மார்வெல் என்கிற பெயரை அதிகளவில் காணப்போகிறோம்.
