பதில் கிடைக்காத கேள்வி என்ற ஒன்றே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, கூகுளில் எல்லாவிதமான கேள்விக்கும் பதில் கிடைக்கிறது. அதனால் தான் “ஓகே கூகுள்” என்று சொல்லி தன் அம்மாவிடம் பேசுவதுபோல பல பெண்கள் பேசுகின்றனர். பெண்கள் கேட்கும் மிகவும் கடினமான கேள்விகளுக்கு மட்டுமின்றி, அவர்களால் கேட்கும் விசித்திரமான கேள்விகளுக்கும் கூகுள் பதிலளிக்கிறது. அந்தவகையில், பெண்கள் சிறு சிறு விஷயங்களுக்கு கூட கூகுளின் உதவியை எதிர்பார்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சரி அப்படி என்னதான் அவர்கள் அதில் தேடுகிறார்கள்? என்று இப்பொது பார்த்துவிடலாம்.
பல பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கூகுளில் தங்கள் கணவர் தொடர்பான பல விஷயங்களைத் தேடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் இளம் பெண்கள் பலர் இரவில் என்னென்ன மாதிரியான விஷயங்களை தேடுகின்றனர் என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
அழகு குறிப்புகள்: அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படும் போது, அது பெண்களைத்தான் டார்கெட் ஆடியன்ஸாக வைத்து உருவாக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். இதனாலே என்னவோ, பெண்கள் பலரும் தன்னை அழகாக காண்பித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இரவில் அதிகம் கூகுளில் பெண்களால் தேடப்பட்ட விஷயமாகவும் இது இருக்கிறது. பெண்கள் பலர் புதிய அழகு சாதன பொருட்கள் குறித்தும், மேக்கப் டிப்ஸ் குறித்தும் இரவில் அதிகமாக தேடி இருக்கின்றனர். கூடவே, முடி பராமரிப்பு சரும பராமரிப்பு குளித்தவற்றையும் தேடி இருக்கின்றனர். வீட்டில் எந்த மாதிரியான இயற்கை அழகு குறிப்புகளை எடுத்துக் கொள்ளலாம், இப்போதைய அழகு ட்ரெண்ட் என்ன என்பது குறித்து தேடி இருக்கிறார்கள்.
ஆன்லைன் ஷாப்பிங்: அனைவருக்குமே, ஷாப்பிங் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக பெண்கள் பலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் பதட்டமாக இருக்கும்போது ஷாப்பிங் செய்வதை பொழுதுபோக்காக கொண்டிருக்கின்றனர். இந்த செயல் அவர்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியை தருகிறதாம். இதனால் ஷாப்பிங் கார்டில் புதிய கலெக்ஷன்களை சேர்ப்பது, ஏதேனும் பொருளை வாங்கலாமா என பார்வையிடுவது போன்றவற்றை பெண்கள் செய்து இருக்கின்றனர். அழகு சாதனங்கள், மின்னணு பொருட்கள், ஆடைகள், நகைகள் அவர்களின் அதிகம் தேடப்பட்ட பொருட்களின் லிஸ்டில் இருக்கிறது. ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் அதன் வாடிக்கையாளர் ரிவியூ, விலை ஒப்பீடு உள்ளிட்டவற்றையும் இவர்கள் செய்கின்றனர்.
பொழுதுபோக்கு: இளம் பெண்கள் பலர், தங்கள் மன அழுத்தத்தை குறைக்க மெல்லியை இசை, காதல் பாடல்கள், மனது ரிலாக்ஸ் செய்வது எப்படி என்பது போன்ற விஷயங்களை இணையத்தில் தேடி இருக்கின்றனர். கூடவே, புதிதாக வெளியான படங்கள், கெத்தொடர்கள், ட்ரெண்டிங்கில் இருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று அனைத்தையும் ஆர்வமாக ஆராய்ந்து இருக்கின்றனர்.
இளம் பெண்கள் பலர், வாழ்க்கையின் முன்னேறுவது எப்படி என்று ஆர்வமாக தேடி இருக்கின்றனர். தங்களை மேம்படுத்திக் கொள்ளும் ஆன்லைன் தொகுப்புகள், உயர்கல்வி வாய்ப்பு, பிற தொழில் வாய்ப்புகள் குறித்து அதிகமாக தேடி இருக்கின்றனர்.
உடல் நலம்: பல பெண்கள் உடல் எடை குறைப்பு குறித்தும், வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சி குறித்தும் தேடி இருக்கின்றனர். மேலும், உடலுக்கு தேவையான யோகா முறைகள் குறித்தும் உடல் அமைப்பு குறித்தும் தேடி இருக்கின்றனர்.
