இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.
தெ.ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை தெ.ஆப்பிரிக்க அணியும், ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணியும் கைப்பற்றின.
இதையடுத்து 2 நாடுகள் இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி, ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
காயத்தால் டெஸ்ட் தொடரில் பாதியில் விலகி, பிறகு ஒருநாள் தொடரிலும் கில் விளையாடாமல் இருந்தார். அவர் மீண்டும் குணமாகி, டி20 தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், அதிரடி வீரரும், ஆல் ரவுண்டருமான ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்கவுள்ளார்.
நாளை முதல் டி20 போட்டியும், 11-ம் தேதி 2வது டி20 போட்டியும், 14-ம் தேதி 3வது டி20 போட்டியும், 17-ம் தேதி 4வது டி20 போட்டியும், 19-ம் தேதி 5வது டி20 போட்டியும் நடைபெறவுள்ளது.
