Close Menu
    What's Hot

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    1540-ஆவது படத்துக்கு இசை அமைக்கும் இசைஞானி இளையராஜா – கைகோர்க்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தவெக ‘ரகசிய சர்வே’… சொல்வது என்ன?
    தேர்தல் 2026

    சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தவெக ‘ரகசிய சர்வே’… சொல்வது என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay tvk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக தரப்பில் எடுக்கப்பட்டதாகச் சொல்லி தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது ஒரு சர்வே ரிப்போர்ட்.

    தவெக தரப்பில் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்த ரகசிய சர்வேயின்படி, இந்தத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காதாம்.

    மேலும், தவெக-வுக்கு 70 முதல் 80 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு கிடைக்கலாம் என்றும் சர்வே சொல்கிறதாம். 70 தொகுதிகளில் 40 சதவீத வாக்குகளும், 140 தொகுதிகளில் 25 சதவீத வாக்குகளும் தவெக-வுக்கு கிடைக்குமாம், பெண்களில் 58 சதவீதத்தினரும் இளம் மற்றும் புதிய வாக்காளர்கள் 80 சதவீதம் பேரும் தவெக-வுக்கு கைகொடுப்பார்களாம்.

    தொகுதிவாரியான சர்வேயில், சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 51 சதவீத வாக்குகளும் திருவள்ளூரில் 50 சதவீத வாக்குகளும் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் – திருவல்லிக் கேணி தொகுதியில் 48 சதவீத வாக்குகளும் தவெக-வுக்கு கிடைக்கலாம் என்று சொல்கிறதாம் சர்வே முடிவு. முதலில், திமுக-வுக்கும் தங்களுக்கும் இடையில் தான் போட்டி என ட்ரெண்ட் செட் செய்த தவெக, அதை பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகவும் மாற்றியது.

    கரூர் அசம்பாவிதம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் தங்களின் அந்த முழக்கத்தை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தி இருப்பார்கள். அந்தளவுக்கு தவெக தலைமை முகாமில் இருக்கும் வியூக வகுப்பு புள்ளிகள் விஜய்க்காக ஹோம்வொர்க் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    அவர்களின் லேட்டஸ்ட் ஹோம்வொர்க் தான் இந்த சர்வே ரிலீஸ் என்கிறார்கள். அதேசமயம், “சுமார் 48 சதவீத வாக்குகளை திமுக கூட்டணியும் சுமார் 39 சதவீத வாக்குகளை அதிமுக கூட்டணியும் சுமார் 8 சதவீத வாக்குகளை நாதக-வும் தங்கள் வசத்தில் வைத்திருக்கும் போது விஜய்க்கு 40 சதவீத வாக்குகள் வானத்திலிருந்து வந்து கொட்டுமா?” என்ற லாஜிக் கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் கேட்கிறார்கள்.

    விஜய்க்காக ட்ரெண்ட் செட் செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வியூகப் புலிகளுக்கும் இது தெரியும். ஆனாலும் கரூர் துயரத்தையே தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள அரசு மீது பழியை தூக்கிப் போட்ட இவர்கள், தேர்தல் அரசியலில் என்னவெல்லாம் செய்தால் மக்களின் வாக்குகளை ஈர்க்க முடியும் என்பதையும் படித்துவைத்துக் கொண்டு அதற்கேற்ப காரியமாற்றுகிறார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை முதல் டி20 போட்டி… இந்தியா, தெ.ஆப்பிரிக்கா மீண்டும் மோதல்
    Next Article பிளவுபடாத கூட்டணி… அசுர பலத்துடன் திமுக
    Editor TN Talks

    Related Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026

    தலித் முதல்வர் எட்டாக்கனியா? – திருமாவளவனின் வேதனையும் தமிழகத்தின் எதார்த்தமும்!

    May 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    1540-ஆவது படத்துக்கு இசை அமைக்கும் இசைஞானி இளையராஜா – கைகோர்க்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

    Trending Posts

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.