Close Menu
    What's Hot

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை… மன்னிப்பு கேட்ட மம்தா
    விளையாட்டு

    மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை… மன்னிப்பு கேட்ட மம்தா

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    messy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

    அர்ஜெண்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்துக்கு வருகை தந்தார். அவரை காண்பதற்காக ரூ 5 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் பெற்று ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். கொல்கத்தாவிலிருந்து மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெஸ்ஸியை நேரில் பார்ப்பதற்காக வந்திருந்தனர்.

    லியோனல் மெஸ்ஸியின் வாகனம் சரியாக இன்று காலை 11.30 மணிக்கு மைதானத்திற்குள் நுழைந்தது. அவருடன் கால்பந்து வீரர்கள் லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் வந்திருந்தனர். மைதானத்தில் கூடியிருந்த கால்பந்து ரசிகர்களின் ஆரவாரத்தைக் கண்டு அந்த வீரர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஆனால் லியோனல் மெஸ்ஸி மைதானத்திற்குள் நுழைந்த உடனேயே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் மற்றும் கால்பந்து கிளப் பிரதிநிதிகள் உட்பட சுமார் 70 முதல் 80 பேர் கொண்ட ஒரு கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டது.

    அந்தக் கூட்டம் மெஸ்ஸியுடன் செல்ஃபி எடுக்கவும், ஆட்டோகிராஃப் வாங்கவும் முயன்றது. இதன் விளைவாக, பார்வையாளர்களால் மெஸ்ஸியை கேலரிகளில் இருந்து பார்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், கோபமடைந்த கால்பந்து ரசிகர்கள் ‘மெஸ்ஸியை காணவேண்டும்’ என்று முழக்கமிடத் தொடங்கினர். இதன் காரணமாக மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் மெஸ்ஸியை உடனடியாக மைதானத்திலிருந்து அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மைதானத்துக்கு வருவதற்கு முன்பே, காலை 11.52 மணியளவில் லியோனல் மெஸ்ஸி மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

    அதிக விலைக்கு டிக்கெட் வாங்கியும் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை என்ற விரக்தியில் கால்பந்து ரசிகர்கள் கோபமடைந்தனர். இதனால் அவர்கள் கேலரியில் இருந்த நாற்காலிகளை உடைத்து மைதானத்திற்குள் வீசத் தொடங்கினர். பாட்டில்களும் மைதானத்திற்குள் பறந்து விழுந்தன. மக்கள் மைதானத்தின் கேலரியின் அருகே இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு பெருமளவில் மைதானத்துக்குள் நுழைந்தனர். நூற்றுக்கணக்கானோர் மைதானத்துக்குள் புகுந்து, தற்காலிக மேடைகளை தலைகீழாகப் புரட்டினர். மேலும், மைதானத்தில் இருந்த சில பொருட்களுக்குத் தீயும் வைத்தனர்.

    காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர், ஆனால் காவல்துறையினரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், பார்வையாளர்களை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மைதானத்துக்கு வெளியேயும் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கூடி நிர்வாகத்துக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் எதிராக முழக்கமிட்டனர். அங்கு அதிக எண்ணிக்கையில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர், அவர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தினர்.

    இதுகுறித்துப் பேசிய ரசிகர்கள், “தலைவர்களும் நடிகர்களும் மட்டுமே மெஸ்ஸியை சூழ்ந்திருந்தனர். அப்படியென்றால் எங்களை ஏன் அழைத்தார்கள். நாங்கள் 12 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கியுள்ளோம், ஆனால் எங்களால் அவரது முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. இது முற்றிலும் ஒரு பயங்கரமான நிகழ்வு. அவர் வெறும் 10 நிமிடங்களுக்கு மட்டுமே வந்துவிட்டு சென்றுவிட்டார். இவ்வளவு பணமும், உணர்வுகளும், நேரமும் வீணாகிவிட்டது. எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை.” என்று தெரிவித்தனர்.

    லியோனல் மெஸ்ஸி இன்று (டிசம்பர் 13) அதிகாலையில் கொல்கத்தா வந்தடைந்தார். மெஸ்ஸியை வரவேற்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. லேக் டவுனில் உள்ள ஸ்ரீபூமி ஸ்போர்ட்டிங் கிளப் அருகே மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது லியோனல் மெஸ்ஸியின் கொல்கத்தாவுக்கான இரண்டாவது வருகையாகும். அவர் ஏற்கெனவே 14 ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவுக்கு வந்திருந்தார்.

    மம்தா பானர்ஜி மன்னிப்பு: கொல்கத்தா மைதானத்தில் ஏற்பட்ட பெரும் குழப்பத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சால்ட் லேக் மைதானத்தில் இன்று ஏற்பட்ட நிர்வாகக் குறைபாடுகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளேன். தங்களுக்குப் பிடித்தமான கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை ஒருமுறையாவது காண வேண்டும் என்பதற்காகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மைதானத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்காக, லியோனல் மெஸ்ஸியிடமும், அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும்” என்று அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: குடியரசு துணை தலைவர், பிரதமர் அஞ்சலி
    Next Article அரசு மீது அதிருப்தி!. தங்கத்தை அள்ளி கொடுத்தாலும், இனி திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்!. செல்லூர் ராஜு விமர்சனம்!.
    Editor TN Talks

    Related Posts

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சிஎஸ்கே முன்னாள் வீரர் அறிவிப்பு

    December 23, 2025

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    ரூ.900 கோடி வசூல்… தொடர்ந்து பட்டையை கிளப்பும் துரந்தர்

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சிஎஸ்கே முன்னாள் வீரர் அறிவிப்பு

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.