4ஜி, 5ஜி செல்போன் சேவை கட்டணத்தை அடுத்த ஆண்டில் 20% வரை உயர்த்த தனியார் தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்கள் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அடுத்த நிதி ஆண்டில் 4ஜி, 5ஜி சேவை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இக்கட்டண உயர்வு 16% முதல் 20% வரை இருக்கக்கூடும்.
இந்த கட்டண உயர்வு, ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு சந்தாதாரர்கள் அனைவருக்கும் பாெருந்தும். இக்கட்டண உயர்வானது, தற்போதைய குறைந்த கட்டண திட்டத்தை நீக்குவது, ஓடிடி சலுகையை நீக்குவது போன்றவை மூலமும் தனியார் நிறுவனங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது
இவ்வாறு அந்த அறிக்கையில் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், செல்போன் பில் கட்டணத்தை 15% முதல் 50% வரை உயர்த்தின. இதையடுத்து 2021ம் ஆண்டில் 20% முதல் 25% வரையும், கடந்த 2025ம் ஆண்டில் 10% முதல் 20% வரையும், இந்தாண்டு 15% வரையும் அதிகரித்தன.
